தன்னம்பிக்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.03.2024

வெற்றி எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம் தான் தன்னம்பிக்கை
அதை எப்போதும் வளர்த்து கொள்.

வாழ்க்கையில் முன்னேற
குன்றாத உழைப்பு
குறையாத முயற்சி
வெற்றி பெறுவோம்
என்ற தன்னபிக்கை
இம்மூன்றும் இருந்தால்
போதும்.

வீழ்ந்தாலும் வீழ்த்தினாலும் எழுந்து
நிற்க கற்றுக்கொள்.

வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது என்பதை நினைவில் கொள்.

தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு.

நேரத்தை வீணாக்கும் பொழுது கடிகாரத்தை பார் ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.

வாழ்க்கையில் சாதிக்கவே
கற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்வில் உயர்வதையே
இலட்சியமாய் மாற்றுங்கள்.

வாழ்க்கையை இயல்பு நிலைக்கு
இயல்பாய் இயங்க விடுங்கள்.

வாழ்க்கையில் இன்முக விருப்பத்துடன்
மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் திறமையும் மகிழ்ச்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை‌ இயேசுவே.

மரியே வாழ்க
                    

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி