எளியோரை மாண்புடன் நடத்திடுக! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

வலியார்முன் தன்னை நினைக்க தான்தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து (250)
தன்னைவிடவும் எளியவரைத் தாக்கச் செல்லும்போது, வலியவர்முன் தான் நிற்பதை நினைக்க வேண்டும். எத்துணை வலிமைமிக்கவராய் நாம் இருந்தாலும் நம்மை வீழ்த்தி அமிழ்த்திவிடும் சூழலைக் தவிர்த்தல் வேண்டும். தகாத இடங்களிலோ, தகாத செயல்களிலோ இறங்கி விடக்கூடாது. வினையை விலை கொடுத்து வாங்கி விடக்கூடாது. சோதனைகளில் மயங்கி விடக்கூடாது. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதையும் மறந்து விடக்கூடாது. எனவே. வலியவர் முன்போ வறியவர் முன்போ நாம் நின்றாலும் கவனமாக பொறுமையாக ஈடுபட வேண்டும்.
"காட்டுக் காய் கனிப் பெருவிழா" நடைபெற்றுக் கொண்டு இருந்தது. பசித்தாலும் புல்லைத் தின்னாத புலி முதல் பூனை வரையிலான இறைச்சி உண்ணும் விலங்குகள் இவ்விழாவைக் கொண்டாடுவதில்லை. மாறாக, அணில்,முயல், ஆடு, மாடு, மான், குதிரை, வரிக்குதிரை, கழுதை, எருமை, ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளே இவ்விழாவின் உரிமையாளர்கள்.
விழாவுக்கான மேடை நிகழ்ச்சி அரங்கேறவிருந்தது. நிகழ்ச்சி நெறியாளர் திருவாளர் குரங்கு பரபரப்பாகி அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தார். பாடுவதற்குக் கழுதைகளும், நகைச்சுவை நாடகத்துக்குக் குரங்குகளும் ஒட்டகங்களும், திருப்பாடல் சொல்வதற்கு முயல்களும் திருக்குறள் மொழிவதற்கு அணில்களும் அணியமாகித் கொண்டிருந்தனர். ஆனால் 'சாதியில்லை, சாதியில்லை. கொம்பாட்டம்) ஆடவேண்டிய மான்களைக் காணோம். குரங்கு, சாத்திரங்கள் எதுமில்லை' என்ற பாடலுக்கு 'சிலா நடனம்' (மான் விரைந்து திரும்பி வந்தார் குதிரை செய்தி கிடைத்தது. மான் யானையாரிடம் ஆலோசனை கேட்டு குதிரையாரை அனுப்பினார். மான்கள் துயரத்தில் அழுது கொண்டிருந்தனர். எனவே, மேடை குடும்பத்தின் குட்டி ஒன்றை நரி கொன்று இரையாக்கிக் கொண்டது. நிகழ்ச்சியைச் சுருக்கமாக வைத்துவிட்டு, காய்கனி விலங்கு நண்பர்கள் எல்லாம் மான் வீட்டுக்குச் சென்றனர். ஆறுதல் சொல்லிக் கொண்டே உடனிருந்தனர்.
'இப்படியே நடந்து கொண்டிருந்தால் நாமும் நம்முடைய பிள்ளைகளும் எப்படித்தான் நிம்மதியாக வாழ முடியும்? அமைதியைக் கிழித்துக் கொண்டு மாடு முழங்கினார். 'ஆமாம். இதற்கு ஒரு தீர்வு வேண்டும்; நமக்கு நல்ல முடிவு தெரிய வேண்டும்' அங்கிருந்த எல்லா விலங்கினத் தோழர்களும் ஒருமித்துக் குரல் எழுப்பினர். இரண்டு செயல்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன:
1. யானையும், குரங்கும் நரிக் குடும்பத்தைச் சந்தித்து மிரட்ட வேண்டும்; மான் குடும்பத்துக்கு நட்ட ஈடு பெற்று வர வேண்டும். குதிரைப்படையும் யானைப்படையும் மனிதக் குரங்குக் காலாட்படையும் தொலைவில் அணிவகுத்து நிற்கும். நரியின் கயமைச் சூழ்ச்சியால் சிங்கம், புலி, கரடி போன்றவை ஒன்றுசேர்ந்து எதிர்த்து வந்தால், நம் முப்படைகளும் எதிர்கொள்ளும்! வெல்லும்!
2. சிங்கம் தலைமையிலான விலங்குகள் அமைதியை விரும்பும் சூழலில், கீழ்க்காணும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும். நாட்டுக்குள்ளிருக்கும் அரசியலாளிகள் போன்று ஏய்த்து, ஏமாற்றி, சுரண்டி வாழும் விலங்குகளைக் காட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்; காட்டில் வாழும் விலங்கின எதிர்காலத் தலைமுறையினர் (குட்டிகள்) எப்பொழுதும் மகிழ்ந்து நிம்மதியாக வாழ, வன்முறை விலங்குகளுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டும்
மான்களும் எளிய விலங்குக் குடும்பங்களின் உறுப்பினர்களும் பேருவகை கொண்டனர். பொழுது விடிந்தது. திட்டம் செயலானது. நரிகளின் பதுங்குக் குழிகளை நோக்கி யானையின் மேல் அமர்ந்து குரங்கு பயணமானது. நரி வீட்டுக்கு அருகில் சென்ற நேரத்தில் யானையாரைக் குரங்கு தடுத்தார்.
"இலைகளை எல்லாம் இந்த இடத்தில் நான் ஒருபோதும் பார்த்ததில்லை" என்று சொல்லிக் கொண்டே மெதுவாகத் தன் காலடியை எடுத்து வைத்தார்.
நினைத்தது போன்றே அது பெரும் பள்ளம். யானை வரும் என்று அறிந்து நரிகள் இரவோடு இரவாக அமைத்து வைத்த புதைகுழி அது. குரங்கு அமிழ்ந்து விடாத வண்ணம் தும்பிக்கையை நீட்டிக் காப்பாற்றினார் யானை.
,
தன்னைக் காப்பாற்றிய அமைச்சர் குரங்குக்கு நன்றி தெரிவித்தார் யானை; நரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். நரிகள் நடுங்கின. நட்ட ஈடு தந்துவிடுவதாக வாக்குறுதி கொடுத்தன. தன்னை விட மெலிந்த விலங்கினங்கள் மீது தாக்குதல் நடத்த முன்வருகையில் தன்னை விட வலிமையான யானை போன்ற விலங்குகளை நினைத்துக் கொண்டு, வன்முறைத் தாக்குதலைக் கைவிட நரிகள் தீர்மானித்துக் கொண்டன.
நம்மை விட வறியவரைக் கொடுமைப்படுத்தி, பாவம் என்னும் குழியில் வீழ்ந்துவிடாமல் ஒருவரை ஒருவ பாதுகாப்போம், பாவமில்லாத பாதுகாப்பான சூழலை நாட வாழும் இடங்களில் உருவாக்குவோம்.
எழுத்து
அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன்
Daily Program
