வலி மற்றும் துக்கத்தின் மத்தியில் புனித பூமியில் வசிப்பவர்களை இக்கிறிஸ்துமஸ் தருணத்தில், அப்படியே விட்டு விட விரும்பவில்லை. பிரார்த்தனையிலும் மற்றும் உறுதியான உதவிகளிலும் நாம் அவர்களுடன் துணை நிற்போம் என்று டுவிட்டர் செய்தியின் மூலம் தனது நெருக்கத்தை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்ஸிஸ்.
குடும்பங்கள், நாடுகள், திருஅவைச் சமூகம் மற்றும் சமுதாயத்திற்கிடையே ஓர் உறவு பலமாக விளங்குகிறீர்கள் என்றும், எல்லோருக்கும் உங்கள் இதயங்களின் கதவுகளைத் திறந்து வைத்திருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த அக்டோபர் 9 திங்கள்கிழமையன்று நடைபெற்ற உலக ஆயர் பேரவையின் 16 ஆவது உலக ஆயர் மாமன்றமானது அக்டோபர் மாதம் 4 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெற்று வருகிறது.
'நம்பிக்கையின் பயணிகள் ' என்ற கருப்பொருளுடன், 2025 ஆம் ஆண்டுக்கான ஜூபிலிக்கு தயாராகும் வேளையில் , இந்திய திருஅவை உலக திருஅவையுடன் இணைந்து பணிகளை ஆற்றி வருகிறது.
அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குபெறுபவர்களின் பெயர்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது, இதில் முதல்முறையாக கத்தோலிக்க திருஅவை இந்த பேரவையில் வாக்களிக்கும் உரிமை உள்ள பிரதிநிதிகளாக பொது நிலையினரையும் தேர்ந்தெடுத்துள்ளது.