ஆசியாவில் இருந்து நற்செய்தி அறிவிப்பு பேராயத்திற்கு இரண்டு ஆசிய குருக்கள் || வேரித்தாஸ் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரண்டு ஆசிய அருள்பணியாளர்களை நற்செய்தி அறிவிப்பிற்காண பேராயத்திற்க்கு நியமித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த அருள்பணியாளர் எர்வின் பாலகாபோ மற்றும் கொரிய அருள்பணியாளர் ஹான் ஹியுண்டேக் ஆகிய இருவரும் வத்திக்கானின் நற்செய்தி அறிவிப்பு பணியின் பேராயத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இரண்டு ஆசிய அருள்பணியாளர்களும் பிலிப்பைன்ஸ் கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டேக்லே தலைமையிலான நற்செய்தி மற்றும் புதிய குறிப்பிட்ட திருஅவையின் பிரிவில் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருள்பணியாளர்கள் பாலகாபோ மற்றும் ஹியுன்டேக் ஆகிய இருவரும் நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் கீழ் மிக சிறந்த ஆளுமை மற்றும் திறன் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்கள் புதிய பொறுப்புகளை அலுவலகத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டால், அவர்கள் ஐந்தாண்டு காலம் வத்திக்கானில் நற்செய்தி அறிவிப்பு பேராயத்தில் பணியாற்றுவார்கள்.
அருள்பணியாளர் பாலகாபோ பிலிப்பைன்ஸில் உள்ள டாக்லோபன் நகரில், லெய்டேவில் பிறந்தார், பாலோவின் உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் ஆவார். மேலும் இவர் திருஅவை சட்ட வழக்கறிஞர், 2013 இல் "திருமணம் மற்றும் குடும்பம்: கரோல் வோஜ்டிலாவின் படிப்பினைகளின்படி மனித எதார்த்தங்கள் " என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
மறுபுறம், புனித தாமஸ் அக்வினாஸின் கூற்றின்படி கிறிஸ்துவின் திருமுழுக்கு : போனற பல ஆய்வுகளுக்காக ஹியுண்டேக் அறியப்படுகிறார். ஜியோவானி பாட்டிஸ்டா சிடோட்டியின் ஜப்பானுக்கான மறைபரப்பு குறித்த மாநாட்டிலும் அவர் பங்கேற்று தனது பங்களிப்பை அளித்துள்ளார்.
ரோமை பேரவையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்த திருத்தந்தை அவர்கள் "நற்செய்தியை பறைசாற்றுங்கள் " என்ற திருமடலை தொடர்ந்து, மக்களின் நற்செய்தி சபை மற்றும் புதிய நற்செய்தி பணியை மேம்படுத்துவதற்கான திருத்தந்தையின் ஆலோசனை பேரவை ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு நற்செய்தி அறிவிப்பு பணிக்கான பேராயத்தை உருவாக்கினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடப்பட்டு, இந்த பேராயம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு அருள்பணியாளர்களின் தலைமையில் மேற்பார்வையிடப்பட அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது இந்த பேராயம் கர்தினால் டேகிள் இதன் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அருள்பணியாளர்கள் பாலகாபோ மற்றும் ஹியுண்டேக் ஆகிய இருவரும் கர்தினால் டேகிள் அவர்களின் கீழ் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், உலக அளவில் நற்செய்தி பறைசாற்றுவது தொடர்பான அடிப்படை கேள்விகளுக்கான பிரிவு அமெரிக்க பேராயர் சால்வடோர் பிசிசெல்லாவின் கீழ் உள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
_அருள்பணி வி.ஜான்சன் SdC
(Source from RVA English News)