நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் இரக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்
நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் இரக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் -திருத்தந்தை பிரான்சிஸ்
செப்டம்பர் 4 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம்பிக்கை , சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் நற்பண்புகளை உள்ளடக்கியதாக, ஜகார்த்தாவின் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் ஆயர்கள், மற்றும் குருக்களுடன் உரையாற்றினார்.
அவரது செய்தி இந்தோனேசியாவுக்கான அவரது அப்போஸ்தலிக்க வருகையின் முக்கிய கருப்பொருள்: "நம்பிக்கை, சகோதரத்துவம், இரக்கம்"என்பது ஆகும்.
இந்தோனேசியாவின் இயற்கை மற்றும் கலாச்சார வளங்களை கடவுளின் பிரதிபலிப்பாகக் காண நம்பிக்கையாளர்களை ஊக்குவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ், இந்தோனேசியாவின் பல்வேறு கலாச்சார மற்றும் மதம் சார்ந்த பிற நிலப்பரப்புகளுக்கு ஒருமுகத்தன்மையை வலியுறுத்தி, திரு அவைக்குள் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.
திருஅவையின் படிப்பினைகளை பஹாசா எனும் இந்தோனேசியாவில் உள்ள மொழியில் மொழிபெயர்ப்பதன் மூலம் திருஅவையின் படிப்பினைகளை இன்னும் ஆழமாக அணுகக்கூடியதாக மாற்ற முடியும் என்றும் அதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் இரக்கத்தை முன்னிறுத்தி தேவையில் இருப்பவர்களின் நலன்களை பேணிக்காத்து திருஅவையில் சுயநலமாக இருப்பவர்களை எச்சரித்து திருஅவையை இயேசுவின் வழியில் நடத்திட வலியுறுத்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் அன்னையின் அற்புதங்களை கூறி தனது உரையை நிறைவுசெய்து, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் இரக்கத்தில் தொடர்ந்து வழிநடக்க அன்னையின் அருள் வேண்டும் என்று நம்பிக்கையாளர்களை ஊக்குவித்தார்.
திருத்தந்தை தனது பணிக்காகவும் இந்த திருப்பயணம் னால முறையில் நடைபெறவும் தனது உடல் நலத்திற்காகவும் செபிக்க அவர் அங்கு கூடி இருந்த மக்களிடம் கேட்டுக்கொண்டு தனது சேதங்களை அனைவர்க்கும் உறுதி அளித்து ஆசி வழங்கி நிறைவு செய்தார்.
திருத்தந்தையின் இந்த திருப்பயணம் எதிர்கால தேவைகளை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த மற்றும் இரக்கமுள்ள ஒரு திருஅவையை கட்டியெழுப்புவதற்கான திருத்தந்தை பிரான்சிஸின் தற்போதைய உறுதிப்பாட்டை இந்த வருகை பிரதிபலிக்கிறது என்பது கண்கூடு.