அன்பின் சாட்சியாக வாழ்வதே சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
புனித வாரம் – வியாழன்
விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14
1 கொரி 11: 23-26
யோவான் 13: 1-15
அன்பின் சாட்சியாக வாழ்வதே சீடத்துவம்!
முதல் வாசகம.
இன்றைய முதல் வாசகமானது, பாஸ்கா (Passover) பற்றிய முக்கியமான நிகழ்வை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாசகப் பகுதிநில், இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்தபோது, கடவுள் அவலகளின் கண்ணீர் நேரில் கண்டு (விப 3:7) அவர்களை விடுவிக்கத் திட்டமிடுகிறார். அதற்கான அடையாளமாக:
• ஒவ்வொரு குடும்பமும் மாசற்ற அத்தவதுகுறைபாடுகள் அற்ற ஓர் ஆட்டுக்குட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அறுத்து, அதன் இரத்தத்தை வீட்டின் கதவின் வாசல்களில் பூச வேண்டும். அந்த இரவு, கடவுள் எகிப்தைத் தண்டிக்க வரும்போது, கதவுகளில், அந்த இரத்தத்தைப் பார்த்ததும், அது இஸ்ரயேலரின் வீடுகள் என்றறிந்து, அந்த வீடுகளைக் கடந்து செல்வார் (Passover).
இதன் மூலம்:
o இஸ்ரவேல் மக்கள் மரணத்திலிருந்து காக்கப்படுகிறார்கள,
o அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுகிறார்கள்.
o
ஆகவே, கடவுள் தம் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறார். ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களை காப்பாற்றியது என்று நம்பினார்கள்.
இந்த நாளை ஆண்டுதோறும் நினைவுகூரும்படி கடவுள் அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்
இரண்டாம் வாசகம்.
இவ்வாசகத்தில், திருத்தூதர பவுல் இயேசு ஆண்டவர் தம்மை ஒப்படைக்கப்பட்ட இரவில் அப்பத்தை எடுத்தார், நன்றி கூறி அதை உடைத்து, “இது உங்களுக்காக கொடுக்கப்படும் என் உடல்” என்றார். அதேபோல் கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு, “இக்கிண்ணம் என் இரத்தத்தில் புதிய உடன்படிக்கை” என்றார்.
“இதனை என்னை நினைவுகூர்ந்து செய்யுங்கள்” என்றும் சொன்னார் என்பதை வலியுறுத்தி விவரிக்கிறார்.
இந்த வாசகம், திருப்பலி கொண்டாட்டத்தின் அடித்தளத்தை நமக்கு விவரிக்கிறது.
இயேசு தம்முடைய உடலும் இரத்தத்தையும் அப்பம், திராட்சை இரசம் மூலம் நமக்குக் கொடுக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது.
நற்செய்தி.
இந்த பகுதியில், இயேசு தம்முடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டதை அறிந்திருந்தார்.
1. அன்பின் உச்சம்
இயேசு தம்முடைய சீடர்களை இறுதி வரை அன்பு செய்தார்.
இது சாதாரண அன்பு அல்ல; தன்னை முழுமையாக கொடுக்கும் தியாக அன்பு.
2. பணிவின் அடையாளம் – கால்கழுவுதல்
அந்த காலத்தில், அடிமைகள் தான் மற்றவர்களின் கால்களை கழுவுவார்கள்.
ஆனால், குருவும் ஆண்டவருமான இயேசு தாமே சீடர்களின் கால்களை கழுவுகிறார்.
இங்கே, பேதுரு ஆரம்பத்தில் இதை ஏற்க மறுக்கிறார். ஆனால், இயேசு “நான் உன்னை கழுவவில்லை என்றால், நீ என்னோடு பங்கு கொள்ள முடியாது” என்று சொல்கிறார்.
சிந்தனைக்கு.
அன்பான சகோதரர் சகோதரிகளே,
இன்றைய புனித வியாழக்கிழமை நமக்கு மூன்று முக்கியமான விடயங்களை நினைவூட்டுகிறது:
1. திருப்பலி (Eucharist),
2. ஆசாரியர் பணியாளர் சேவை (Priesthood),
அன்பின் கட்டளை (Love Commandment).
இயேசு தனது இறுதி இரவு உணவில் அப்பத்தையும் திராட்சரசத்தையும் தன் உடலாகவும் இரத்தமாகவும் அளித்தார். இதன் மூலம் அவர் நமக்கு எப்போதும் உடன் இருப்பதற்கான வழியைத் தந்தார். நாம் திருப்பலியில் பங்கேற்கும் ஒவ்வொரு நேரமும், இயேசுவுடன் நெருங்கிய உறவைப் பெறுகிறோம். நறகருணைதான் நம்மை ஒருவர் ஒருவருடனும், ஆண்டவருடனும் பிணைக்கிறது. நறகருணை நமக்கு ஆன்மீக உணவு மட்டுமல்ல. அதுவே நமது கிறிஸ்தவ வாழ்வுக்கு உச்சுமும் ஊற்றாகவும் உள்ளது என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம. ஆண்டவர் ஏற்படுத்திய ந்றகருணை நம்மை இறைமக்களாகக் நாளும் பொழுதும் கட்டி எழுப்புகறது.
நற்கருணையானது "நமது விண்ணகப் பயணத்திற்கான உணவு" எனக் கருதப்படுகிறது; அது நம்பிக்கையாளர்களாகிய நம்மை அன்றாட வாழ்வில் பலப்படுத்தி, நம்பிக்கையை அளித்து, கிறிஸ்து நம்மில் உடனிருக்க வழிவகுக்கிறது. நற்கருணை சிலுவையில் இயேசு செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து, அதனை இன்றும் நிலைத்திருக்கச் செய்கிறது.
புனித வியாழனான இன்று, இயேசு தமது சீடர்களின் கால்களை கழுவி, உண்மையான மகத்துவம் சேவையில் இருப்பதை கற்றுக்கொடுத்தார். “நான் உங்களுக்குச் செய்ததை நீங்கள் ஒருவருக்கொருவர் செய்யுங்கள்” என்று அவர் சொன்னார். இது அன்பும் தாழ்மையும் கொண்ட வாழ்க்கைக்கு நாம் அழைக்கப்படுகிறோம்.
இதனிமித்தம் இன்றைய நாள் நமக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறது:
நாம் அன்புடன் சேவை செய்கிறோமா? நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறதா?
புனித வியாழக்கிழமை நற்செய்தி நமக்கு மூன்று முக்கியமான அழைப்புகளை தருகிறது:
• அன்பு செய்யுங்கள்
• பணிவாக இருங்கள்
• மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்
இயேசுவின் அன்பையும் தியாகத்தையும் நினைவுகூரும் இந்நாளில், நாமும் அன்பில் வளர்ந்து, பணிவுடன் சேவை செய்ய முடிவு செய்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, முதலாவதாக, நான் உம்மால் கழுவப்படவம், நான் மற்றவர்களைக் கழுவும் செயலில் ஈடுபடவும் என்னை திடப்படுத்தியருளுவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
• பணிவாக இருங்கள்
• மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்
- Reply
Permalink