கோபத்தின் வடிகால் ...| அருட்சகோதரி. செலஸ்டி சலேஸ் SSAM | Veritas Tamil

கோபத்தின் வடிகால் ...


கோபப்படுபவர்கள் எல்லாம் கெட்டவர்களல்ல
கோபப்படாதவர்கள் எல்லாம் நல்லவர்களுமல்ல
கோபமுள்ள இடத்தில் தான் குணமிருக்கும் என்பது முதுமொழி.
ஒருவரின் தீய எண்ணம், தீய சொல், தீய செயல், இவைகளை அறியும் போது, கேட்கும் போது, பார்க்கும் போது, கோபம் என்ற எதிர்மறை உனர்வு ஏற்படுகிறது. அச்செயலுக்கு எதிர்வினை புரியும் போது கோபம் தவறாகிறது. குற்றமாகிறது.

செயல் ----------------------இடைவெளி-----------------------------

எதிர்வினை (கோபம்
கோபம் வந்ததும் உடனே செயலில் இறங்காமல் செயலுக்கும் கோபத்திற்கும் உள்ள இடைவெளி...நேரம் அதிகமானால் கோபத்தின் விரியம் குறைகிறது. உறவு நிலைக்கிறது, மன அமைதி பிறக்கிறது.
அந்த இடைவெளி நேரத்தை அதிகரிக்க.
பாடல் கேட்கலாம்-ஆடல் பார்க்கலாம்.
எழுந்து நடக்கலாம்- படுத்து உறங்கலாம்.
எழுதி கிழிக்கலாம் - அமைதி காக்கலாம்.
நல்லதை சிந்திக்கலாம் -  நல்லாரை சந்திக்கலாம்.
இயற்கையை ரசிக்கலாம் - இனியதை புசிக்கலாம்.
பூக்களை காணலாம் - மாக்களைப் பேணலாம்.
வாய்விட்டு சிரிக்கலாம் - மனம் வீட்டு பேசலாம்.
பொறுமையாய் இருக்கலாம் - எளிமையாய் சகிக்கலாம்.
பைபிள் படிக்கலாம் - இறைவனை துதிக்கலாம்.
தவற்றை மன்னிக்காலம்  - ஜெபமாலை ஜெபிக்கலாம்.
இத்தனை வழிகளா!!! விழிமலர்கிறதர்!!!

அருட்சகோதரி. செலஸ்டி சலேஸ் SSAM

மீஞ்சூர்