இந்தியக் கத்தோலிக்கத் திருவிவிலிய அமைப்பின் மாநாடு புதிய நிர்வாகம் தேர்வு!| Veritas Tamil

இந்தியக் கத்தோலிக்கத் திருவிவிலிய அமைப்பின் மாநாடு புதிய நிர்வாகம் தேர்வு!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தர்மாராம் வித்யா மையத்தில், இந்தியக் கத்தோலிக்கத் திருவிவிலிய அமைப்பின் ஆண்டுப் பொது மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 85 சிறந்த விவிலிய அறிஞர்கள் ஒன்றுகூடிய இந்நிகழ்வில், திருவிவிலியத்தில் சரியான அணுகுமுறை: இந்தியத் திரு அவை -அரசியல் சூழலிலிருந்து படித்தல்" என்ற கருப்பொருளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்தியக் கத்தோலிக்கத் திருவிவிலிய அமைப்பின் மாநாடு புதிய நிர்வாகம் தேர்வு!  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தர்மாராம் வித்யா மையத்தில், இந்தியக் கத்தோலிக்கத் திருவிவிலிய அமைப்பின் ஆண்டுப் பொது மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 85 சிறந்த விவிலிய அறிஞர்கள் ஒன்றுகூடிய இந்நிகழ்வில், திருவிவிலியத்தில் சரியான அணுகுமுறை: இந்தியத் திரு அவை -அரசியல் சூழலிலிருந்து படித்தல்" என்ற கருப்பொருளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.  மேலும் ,தெல்லிச்சேரி பேராயர் மேதகு ஜோசப் பாம்ப்லானியின் சிறப்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்வில், சுல்தான்பேட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் அபிர், இன்றைய நவீன உலகில் தலைமைத்துவ உருவாக்கம், நீதி மற்றும் பங்கேற்பு முறையை வடிவமைப்பதில் விவிலியத்தின் தொடர்பு குறித்துச் சிறப்புரை ஆற்றினார்.  இந்த அமர்வுகளில் சிறப்புமிக்க இந்திய இறையியலாளர்களின் அறிவார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றன. இந்த மாநாட்டில், தனது இரண்டு பருவத் தலைமைப் பணிக்காலங்ளை நிறைவு செய்த அருள்பணி. ஜாய் பிலிப்பிற்குப் பாராட்டு வழங்கப்பட்டது. இந்த விவிலியப் பணியில் அவரது தொலைநோக்கு வழிகாட்டுதலுக்கும் அயராத முயற்சிகளுக்கும் அவர் மனதாரப் பாராட்டப்பட்டார்.  இறுதியாக ,இந்தக் கூட்டத்தின்போது, வரும் ஆண்டுகளில் இந்தியக் கத்தோலிக்கத் திருவிவிலிய அமைப்பின் புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மங்களூர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் வின்சென்ட் செக்வேரா தலைவராகவும், துணைத் தலைவராக அருள்சகோதரி ஜான்சி சூரத்தோட்டியில், செயலாளராக அருள்பணி. ஜெயா பிரதீப், பொருளாளராக அருள்சகோதரி ஸ்மிதா கேப்ரியல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

மேலும் ,தெல்லிச்சேரி பேராயர் மேதகு ஜோசப் பாம்ப்லானியின் சிறப்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்வில்,
சுல்தான்பேட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் அபிர், இன்றைய நவீன உலகில் தலைமைத்துவ உருவாக்கம், நீதி மற்றும் பங்கேற்பு முறையை வடிவமைப்பதில் விவிலியத்தின் தொடர்பு குறித்துச் சிறப்புரை ஆற்றினார்.

இந்த அமர்வுகளில் சிறப்புமிக்க இந்திய இறையியலாளர்களின் அறிவார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றன. இந்த மாநாட்டில், தனது இரண்டு பருவத் தலைமைப் பணிக்காலங்ளை நிறைவு செய்த அருள்பணி. ஜாய் பிலிப்பிற்குப் பாராட்டு வழங்கப்பட்டது. இந்த விவிலியப் பணியில் அவரது தொலைநோக்கு வழிகாட்டுதலுக்கும் அயராத முயற்சிகளுக்கும் அவர் மனதாரப் பாராட்டப்பட்டார்.

இறுதியாக ,இந்தக் கூட்டத்தின்போது, வரும் ஆண்டுகளில் இந்தியக் கத்தோலிக்கத் திருவிவிலிய அமைப்பின் புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மங்களூர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் வின்சென்ட் செக்வேரா தலைவராகவும், துணைத் தலைவராக அருள்சகோதரி ஜான்சி சூரத்தோட்டியில், செயலாளராக அருள்பணி. ஜெயா பிரதீப், பொருளாளராக அருள்சகோதரி ஸ்மிதா கேப்ரியல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
 

Daily Program

Livesteam thumbnail