உறைந்து கிடக்கும் திறமைகளை தட்டி எழுப்பு! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil
நாம் மற்றவர்களிடத்தில் பேசும் விதம், அணுகும் முறை இவைகளை வைத்தே நமது மதிப்பு கணக்கிடப்படுகிறது.
நாம் ஒவ்வொருவரும் சமூகத்தில் உள்ள மற்ற நபர்களிடம் நல்ல உறவு நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதற்கு நாம் மற்றவர்களிடம் பேசி பழக வேண்டும். மற்றவர்களிடம் நன்றாக பேசுவது என்பது நம் எல்லோருக்கும் எளிதில் வந்துவிடாது. சிலர் எளிதாக நம்மிடத்தில் பழகி விடுவார்கள். இன்னும் சிலர் நன்றாக பழகுவதற்கு நேரம் எடுத்துக் கொள்வார்கள். இதுதான் மனித இயல்பு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நம்மில் சிலர் மற்றவர்களின் உருவத்தைப் பார்த்து இவர்கள் நம்மிடம் நன்றாக பேசுவார்களா, இல்லையா என்று, அவர்களை எடை போடுகிறோம். அதனை விடுத்து மற்றவர்கள் நம்மிடத்தில் பேசுவதற்கு முன்பாகவே அவர்களை எடை போடுவது நல்லதன்று என்பதை புரிந்து கொள்வோம். நாம் மற்றவர்களிடத்தில் பேசும் விதம், அணுகும் முறை இவைகளை வைத்தே நமது மதிப்பு கணக்கிடப்படுகிறது. எனவே நாம் மற்றவர்களிடத்தில் பேசுவதற்கும், அணுகுவதற்கும் பயப்படத் தேவையில்லை. குறிப்பாக புதிதாக நாம் சந்திக்கும் நபர்களிடம் எளிதில் பேச நம்மை பயிற்றுவிப்போம். நமது கருத்துக்களை மற்றவர்களிடம் தெளிவாக பேசக் கற்றுக்கொள்வோம். அதுவே நம்மை நாளும் வளர்த்தெடுக்கும் என்பதை புரிந்து கொள்வோம்.
நமது குடும்பங்களில், பணிபுரியும் இடங்களில் மற்றவர்களுடன் உரையாடுவதற்கு பேச்சுத்திறமை தேவையில்லை. நாம் அவர்களிடம் கூற விரும்பும் கருத்துக்களை தெளிவாக, நுணுக்கமாக எடுத்துரைத்தாலே போதும்;. குறிப்பாக முன்பின் தெரியாதவர்களிடம் நாம் அதிகமாக பேசினோம் என்றால் நம்மைப்பற்றிய தவறான அபிப்பிராயம் அவர்களுக்கு எழலாம். எனவே அவர்களிடம் வளவளவென பேசாமல், பேசுவதை தெளிவாக பேசுவோம். தெரியாத நபர்களிடம் பேசும்போது எடுத்தெறிந்து பேசாமல், மற்ற நபர்களைப்பற்றி குறை சொல்லாமல் நாம் அறிமுகப்படுத்தும் விதம்தான் நமக்கும் அவர்களுக்கும் இடையே பரஸ்பர உறவை ஏற்படுத்தும்;. நாமாக சொந்தமாக நமது கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டால் நமக்கு நிச்சயம் தன்னம்பிக்கை வளரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை உணர்நது கொண்டு நமது பேசும் திறமையை வளர்த்துக் கொள்வோம். நாம் மற்றவர்களிடம் பேசும்போது குழப்ப மனநிலையில் பேசுவதையும், அவர்களின் சொந்த வி~யங்களுக்குள் நுழைவதையும் தவிர்ப்போம். சில வி~யங்களை தவிர்த்தால் நாம் வாழ்வில் நலமாக வாழலாம் என்பதை புரிந்து கொண்டு செயல்பட நம் மனதை தயார்படுத்துவோம்.