இறைவனின் ஆசி | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

இறைவனின் ஆசி 
நம் எல்லா விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் விடப் பன்மடங்கு உயர்ந்தது! 

இறைவேண்டல் மேலெழும்பும்போது, இறைவனின் ஆசி கீழிறங்கி, நம் இதயத்தை அமைதியால் நிரப்பி, மனதைக் குளிரச் செய்து, ஆன்மாவை மிளிரச் செய்து, வாழ்வை அழகாக்குகிறது!

நீங்கள் உங்கள் பிரச்சனைகளை எண்ணுவதை விட்டுவிட்டு, ஆசிகளை எண்ணுங்கள்; வாழ்க்கை அழகாகும். மண்ணகச் செல்வத்தை எண்ணுவதை விட்டுவிட்டு, விண்ணக ஆசிகளை எண்ணுங்கள்; 
வாழ்க்கை வளமாகும்! 

நீங்கள் உங்கள் ஆசிகள்மீது கவனம் செலுத்துங்கள்; நன்றியுணர்வு அதிகரிக்கும். பிறரின் ஆசிகள் மீது கவனம் செலுத்தினால் பொறாமை அன்றோ மிஞ்சும்! 

பிரச்சனைகள் உங்கள் வாழ்வில் அதிகரிக்கும் போது, இறைவனிடம் உங்கள் நெருக்கம் அதிகரிக்கட்டும். அவரே ஆசியாக  மாற்றித் தருவார்!

ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்க முடிவு செய்தால், 
பிறர் உங்களுக்கு எதிராக என்ன சூழ்ச்சி செய்தாலும், அனைத்துச் சூழலையும் உங்களுக்குச் சாதகமாக்கி,  ஆசியைப் பொழிந்து 
அணி செய்வார்! 

நாம் பிறருக்குக் கொடுப்பதெல்லாம் நமக்கே திரும்பி வருமென்றால், ஆசியை மட்டும் கொடுங்கள்! 

வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🔥🌷

எழுத்து

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. 

Tamil Survey Popup Image