“இந்த 40 ஜோடி ஜன்னல்கள் 400 ஜோடிகளாகவும், 4,000 ஜோடிகளாகவும், 40,000 ஜோடி ஜன்னல்களாகவும் மாறி, நாம் ஒருவரை ஒருவர் நோக்கிப் பார்க்கும் வாய்ப்பைத் திறக்கலாம்.”
“ஒரு மறைப்பணியாளர் அனுப்பப்படுவதற்கு முன்பே அழைக்கப்பட்டவர்.”
மக்களின் சொந்த மொழியில் கதைகளைப் பகிர்வதன் மூலம், அவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்கு இன்னும் நெருக்கமாகத் தொடர்புகொள்ள முடியும். கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் அனுபவங்களில் வேரூன்றிய கதைகளை இணைய தளங்கள் வழியாக எடுத்துரைக்க வேண்டும்
திருஅவை நேரடியாக உடல்ரீதியாகச் சென்றடைய முடியாத இடங்களுக்குச் செல்லும் பாலங்களாக டிஜிட்டல் தளங்கள் மாற முடியும் என்று அவர் தெரிவித்தார். ஒரு சமூக ஊடகப் பதிவு, நேரலை நிகழ்ச்சி அல்லது டிஜிட்டல் கதை ஆகியவை, மக்களுக்கும் நற்செய்திக்கும் இடையே சந்திப்பை உருவாக்கும் ஒரு பாலமாக அமையக்கூடும்
“ஒவ்வொரு திரைக்குப் பின்னாலும் அர்த்தத்தைத் தேடும் ஒரு நபர் இருக்கிறார். உறவைத் தேடும் ஒருவர் இருக்கிறார். சில நேரங்களில் தங்களுடைய பேச்சைக் கேட்க யாராவது ஒருவர் வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒருவரும் இருக்கிறார்.”
“வெறுங்கால் மருத்துவர்கள் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் அல்ல. ஆனால் பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பயிற்சி பெற்றவர்கள்,” என்று அருட்சகோதரி ஈவா கூறினார்.