மாற்றத்தின் புதிய வழியில் - எதிர்நோக்கின் திருப்பயணிகள் ! | Veritas Tamil

கிறிஸ்து இயேசு பிறந்த மஞ்சூரைப் நோக்கி வழிநடத்தும் நட்சத்திரத்தைப் பின்தொடரும் மூன்று ஞானிகளின் படம்.

ஆசியா முழுவதிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் கண்டளவிலான எதிர்நோக்கின்  திருப்பயணிகள் நவம்பர் (27–30) — பெனாங்கில் கூடும் இந்த நேரத்தில், “ஆசிய மக்கள் ஒன்றாகப் பயணிப்போம்” என்ற தலைப்பும், “அவர்கள் வேறு வழியாகச் சென்றார்கள்”.

இந்தத் தலைப்பு கிழக்கிலிருந்து வந்த ஞானிகளின் பழமையான உருவத்தை நினைவூட்டுகிறது — பரிச்சயமானவற்றை விட்டுவிட்டு, ஒரு நட்சத்திரத்தின் வழிகாட்டுதலை நம்பி பயணித்த தேடுபவர்கள். கிறிஸ்துவைச் சந்தித்த பின் அவர்கள் பழைய பாதைக்கு திரும்பவில்லை; மாற்றத்தின் புதிய வழியைத் தேர்ந்தெடுத்தனர்.

நமது “நட்சத்திரம்” ஒரு கவிதைச் சித்திரம் அல்ல; அது நமது நிஜ வாழ்க்கை. வறுமையும் வளமும், பழமைமிகு மதங்களும் புதிய இயக்கங்களும், மோதலும் சமரசமும் — இவற்றால் வடிவமைக்கப்பட்ட நிலப்பரப்புகள் முழுதும் ஒளிரும் நம்பிக்கையின் ஒளிக்கிளை அது. சமூக முகங்களிலும், கலாச்சாரங்களின் நிலைத்தன்மையிலும், புறக்கணிக்கப்பட்டோரின் அழுகுரல்களிலும் வெளிப்படும் நட்சத்திரம் அது.

ஞானிகள் வானத்தின் அடையாளங்களை வாசித்து முன்னேறினர். அதைப் போலவே ஆசிய திருச்சபை நமது காலத்தின் அடையாளங்களை வாசிக்க வேண்டும் —
சூழல் நெருக்கடி,இடம்பெயர்வு,பொருளாதார அநீதி,
மத பல்வகைமை,தொழில்நுட்ப மாற்றங்கள்.

இன்றைய நட்சத்திரத்தைப் பின்பற்றுவதற்கு பழைய பாதைகளை விடும் தைரியமும், புதிய வானவரம்புகளுக்குச் சேர்ந்து நடக்கும் தாழ்மையும் தேவை.

பெனாங்கில் நடைபெறும் இவ்வாண்டின் கூடுகை, இருபது ஆண்டுகளுக்கு முன் சியாங் மை நகரில் நடந்த ஆசிய மாநாட்டில் தொடங்கிய பயணத்தைத் தொடர்கிறது. 
ஆசியா கிறிஸ்துவின் கதையை “எப்படி வாழ வேண்டும்”?
ஒருங்கிணைந்து, சினோடல் முறையிலும், தைரியத்துடனும்.
நட்சத்திரம் முன்னேறியுள்ளது; நாமும் முன்னேறவேண்டும்.

ஆசியா இன்னும் பல்துறை கலாச்சாரங்கள், ஞான மரபுகள், ஆன்மிகக் கற்பனைகளின் ஓவியம் போல உள்ளது.
இந்துக் கீர்த்தனைகள்,பௌத்த சூத்திரங்கள்,
தாவோ தத்துவங்கள்,சூஃபி கவிதைகள்,உயிர்ப்புள்ள பழங்குடி மரபுகள் —இவை எல்லாம் மனிதனின் மறைநிலை ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

கிறிஸ்துவின் நட்சத்திரம் இம்மரபுகளை நீக்க அழைப்பதில்லை; அவற்றின் உள்ளே மரியாதையுடன் நுழைய அழைக்கிறது. பல மொழிகளில் தேவன் பேசும் குரலைக் கேட்கவும், எதிர்பாராத இடங்களில் மலரும் புனிதத்தைக் காணவும் அது நம்மை அழைக்கிறது.

பல ஆசிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருப்பதால், திருச்சபை மிக வலிமையாகப் பேசுவது பிரசங்க மேடைகளிலிருந்துஅல்ல;வீடுகளிலிருந்து,மருத்துவமனைகளிலிருந்து,சிற்றாலயங்களிலிருந்து,நெற்பயிர்ப்புலங்களிலிருந்து,மீன்பிடி கிராமங்களிலிருந்து,நெஞ்சில் கருணையும் பொறுமையும் கொண்ட ஏழை மக்களைப் பணியும் வாழ்க்கையிலிருந்து.போப் பிரான்சிஸ் கனவு கண்டது இதுதான் —தன் நிச்சயங்களில் மூழ்கிய திருச்சபை அல்ல,
காயமடைந்தோருக்கு அருகில் இருக்கும் திருச்சபை.

கலாச்சார மோதல்கள், அரசியல் பதற்றம் நிறைந்த இப்பிராந்தியத்தில், நட்சத்திரம் நம்மை மத நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் அழைக்கிறது.
ஆசியாவின் வீதிகள், கோயில்கள், ஆலயங்கள், திருத்தலங்கள் பல மதங்களின் பகிரப்பட்ட புனித இடங்களாகவே இருந்தன.இவை நமக்கு நினைவூட்டுவது:
இணைந்திருப்பது சாத்தியமானது மட்டுமல்ல — அது ஆசியாவின் இதயமே.

ஆண்டவரின் உயிர்த்தெழுதலின் 2000ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள யூபிலி 2033 நோக்கி திருச்சபை முன்னேறும் வேளையில், இந்த நட்சத்திரம் மேலும் பிரகாசமாக ஒளிர்கிறது.உயிர்த்தெழுதல் என்பது வெறும் வரலாற்று நிகழ்வின் நினைவாக அல்ல;
நாம் வாழ வேண்டிய நம்பிக்கை.

அந்த வேறு வழி என்பது சினோடாலிட்டியின் வழி —
தனித்ததாய் அல்ல, ஒருமித்த பயணம்.ஆக்கிரமிப்பு அல்ல, உரையாடல்.அங்கீகாரம் அல்ல, துணைநிலை.
அதிகாரத்திலல்ல, தாழ்மையிலும் கேட்பதிலும் உறுதியான சேவை.

இந்த திருப்பயணம்  ஒரு நிகழ்வு அல்ல;
ஆசிய திருச்சபை இன்னும் பயணத்தில் இருப்பதாகும் அறிவிப்பு.கிழக்கில் இருந்து ஞானிகளை இயக்கிய அதே நட்சத்திரம் இன்று நம்மையும் வழிநடத்துகிறது.
ஆயர்கள், பொதுமக்கள் தங்கள் சமூகங்களுக்கு திரும்பும் போது,அந்த ஒளியைத் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள்.

நமக்குள்ள அழைப்பு எளியதும் ஆழமானதும்:
ஒன்றாகப் பயணிப்போம்.தைரியமாக விவேகிப்போம் என்ற கருத்துடன் சமாதானம், உரையாடல், நம்பிக்கை தேடும் இந்த கண்டத்திற்காக வேறு வழியில் செல்லத் தொடங்குவோம்.