வலிமை அறிந்து செயலாற்றுக! | செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின் (475)

மயில் தோகையே ஆனாலும், அளவுக்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து விடும்.

பகைவர் சிறியவராயினும் மிகப் பலர் ஒன்று கூடினால், எவ்வளவு வலியவனாயினும் அவன் தோல்வி அடையவே நேரிடும். எனவே வலிமையைத் தொகுத்தறிய வேண்டும் என்று திருக்குறளின் பொருட்பாலில் உள்ள 'வலியறிதல்' என்னும் அதிகாரத்தில் வரும் இக்குறள் வலியுறுத்துகிறது.

ஒர் ஊரில் ஒரு செல்வந்தர். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். அவர்தம் மனைவியும் செவிலித் தாயும் அக்குழந்தைகளை நன்றாய் வளர்த்தனர். அவர் வெளிநாடுகளில் வணிகம் செய்து, தம் செல்வத்தைப் பெருக்கினார். தம் பிள்ளைகள் விரும்புவதற்கும் கேட்பதற்கும் மேலாகவே பரிசுப் பொருள்களை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் மூன்று பெரிய அன்பளிப்புகளைக் கொண்டு வந்து தன்னைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மூத்தவள் வந்தாள்: "அப்பா, நீங்க இந்த இயற்கை மாதிரி" என்றாள். இரண்டாமவள் சொன்னாள் மாதிரி', இருவருடைய கூற்றிலும் மெய்சிலிரித்துப் போனார். "அப்பா நீங்க இந்த இயற்கையை' படைத்தளித்த இறைவன் மூன்றாமவளிடம் ஆவலோடு கேட்டார். 'நீ சொல்லுமா... அப்பா எது மாதிரி? யார் மாகிரி? இளையவள் பூங்கொடி சொன்னாள் "அப்பா, நீங்க அப்பா மாதிரி" அப்பாவுக்கு சப்பென்றாகிவிட்டது. "வேறு ஏதாவது?" என்று மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தார். அவள் வேறு எதுவும் சொல்லவில்லை. முதல் இரண்டு மகள்களுக்கும் பரிசுகள் வழங்கினார். இளையவளை, "வீட்டை விட்டு வெளியே போ" என்று விரட்டினார்.

பூங்கொடியோடு செவிலித் தாயும் வெளியேறினார். நடந்தார்கள். காடு, மலை எனக் கடந்தார்கள். இருள் கவ்வும் நேரமானது. அது பெரிய காடு. அங்கே ஒரு பெரிய மரம். அதிலே ஒரு பெரிய பொந்து. இருவரும் தங்கும் அளவுக்கு இடம் இருந்தது. கையில் கிடைத்த ஒரு சில பழங்களைக் கொண்டு பசியாற்றினர். பையில் இருந்த புட்டும் உணவானது. சிறிதளவு புட்டு மரத்துக்கு வெளியேயும் விழுந்தது.

இரவில் தூக்கம் வரவில்லை. காட்டு விலங்குகளின் ஊளையிடும் ஓசைகள், செடியாடியதால் ஏற்பட்ட அசைவுகள், காலையில் கண்விழித்ததும் பார்த்தனர்,

அங்கே சில மயில் இறகுகள், பூங்கொடி அவற்றை எடுத்துக் கொண்டாள். அருகில் இருந்த ஊரில் அம் மயில் இறகுகளை விற்றாள். கிடைத்த பணத்திற்குப் புட்டு வாங்கினாள். இருவரும் உண்டனர். மீதியிருந்ததை மரத்துக்கு வெளியே பரவலாக வீசினர். இரவு வேளையில் மெலிதான நிலவு வெளிச்சத்தில் பார்த்து மகிழ்ந்தனர். பெருங்கூட்டமாய் மயில்கள்,

காலையில் அங்கு கிடந்த ஏராளமான மயில் இறகுகளைப் பார்த்தனர். மயில் இறகு விசிறிகள், மயில் இறகு அழகுப் பொருள்கள் என உற்பத்திப் பெருகியது. விற்பனை நடந்தது. ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது.

மயில்கள் பூங்கொடியின் தோழிகளாயின. ஆண், பெண் மயில்களைப் பூங்கொடி மிகவும் அன்பு செய்தாள். மயில் இறகு வணிகம் விரிவானது. அன்று அந்த வாடகை வண்டி குட்டி யானை வரவழைக்கப்பட்டது. அந்த அழகுப் பொருள்கள் ஏற்றப்பட்டன.

வண்டி விரைந்தது. குறுக்கே பறந்து வந்த மயில் கண்ணாடியில் மோதியது. கண்ணாடி உடைந்தது. மயில் உயிரற்று வண்டிக்குள் திடந்தது. வண்டியும் நிலை தடுமாறிப் பள்ளத்தில் விழுந்தது.

செய்தியறிந்து, மயில்கள் கூடின. வண்டி ஓட்டுநர் பேச்சற்று நின்றார். கண்ணாடி உடைந்ததனால் முகத்திலும் தலையிலும் இரத்தம் சொட்டச் சொட்ட பூங்கொடி வண்டியை விட்டு இறங்கினாள்.

மயில்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை? ஒருபக்கம். தம் இனத்து மயிலுக்கு ஏற்பட்ட முடிவினால் கோவம், மறுபக்கம், தம் இனத்தை அன்பு செய்யும் பூங்கொடிக்கு ஏற்பட்ட பாதிப்பினால் பரிவு.

பூங்கொடி மயில்களிடம் மன்னிப்பு கேட்டாள். மயில் இறகுகள் தானே என்று நாங்கள் அளவுக்கு அதிகமாக, எடை கூடுதலாகப் பொருள்களை ஏற்றி வந்தது குற்றம். எதிரே வண்டி ஏதும் வராது என்று எண்ணி வேகமாக வண்டியை ஒட்டியதும் குற்றம், இவற்றின் காரணமாக அன்பு மயிலை இழந்து விட்டோம். பொறுத்துக் கொள்ளுங்கள். ஓட்டுநரையும் விட்டு விடுங்கள் என்றாள்.

இவ்வளவு பணிவான பேச்சைக் கேட்டதும் மயில்களின் தலைவன் தோகையை விரித்தான். அனைத்து மயில்களும் தோகையை விரித்து நடனமாடின. பூங்கொடியின் வலி மறைந்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர். இம் மயில் மாதிரி நம்ம அப்பா இல்லையே என்ற ஏக்கம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை தொடர்ந்தது.

நாள்கள் பறந்தோடின. பூங்கொடியின் பெயர் செய்தி ஏடுகளில் வெளிவந்தது. தமிழகமெங்கும் பாராட்டு மழை. அப்பாவும் அம்மாவும் மூத்த மகள்கள் இருவரும் பூங்கொடி இருந்த இடம் தேடிப் பயணத்தைத் தொடங்கினர்.