ஆசிய மக்களின் அனுபவத்தை ஒருங்கிணைப்போம்! | Veritas Tamil
ஆசிய மக்களின் அனுபவத்தை ஒருங்கிணைப்போம்: மிகப்பெரும் நம்பிக்கையின் புனித திருப்பயணம் .
ஆசிய திருச்சபை 2025 நவம்பர் 20 முதல் 27 வரை மலேசியாவின் பெனாங்கில் நடைபெறும் **மிகப்பெரும் நம்பிக்கையின் புனித திருப்பயணத்தின் கூட்டத்தைக் குறிவைத்து முன்னேறும் இந்த நேரம், நம் பொதுவான நம்பிக்கைமட்டுமின்றி , அந்த நம்பிக்கை வேரூன்றியிருக்கும் மண்ணையும் சிந்திக்க அழைக்கிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயர்கள், அருட்தந்தையர்கள் , மற்றும் இறைமக்கள் ஒன்று கூடுகின்றனர்.
அவர்களை ஒன்றிணைக்கும் இந்நிகழ்வில் :
**நாம் ஆசிய கத்தோலிக்கர்கள் என்ற அடையாளத்தை எவ்வாறு நம் கண்டத்தின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பல்வகை மரபுகளோடு ஒத்திசைவாக வாழ முடியும்?**என்ற கேள்வியை முன்வைக்கிறது.
நம் கலாச்சாரங்களில் ஏற்கனவே விதைக்கப்பட்டுள்ள கடவுளின் அருளையும் உண்மையையும் காணும் பார்வையை.
ஆதிக்கம் இல்லாமல்,அமைதியான கருணை மற்றும் மனிதத்துவத்தின் மூலம் கிறிஸ்துவைச் சாட்சியமாக நிறுத்தும் வாழ்க்கையை இந்நிகழ்வு உணர்த்துகிறது .
இந்த உரையாடல் சார்ந்த அடையாளத்தின் வேர்கள் நம்பிக்கையின் மையத்தில் —**உடல் பெற்ற மர்மத்தில்** — உள்ளது.
இறைவன் தூரத்தில் இருந்து உலகை எதிர்கொள்ளவில்லை;
மனித வாழ்க்கைக்குள் இறங்கி வந்தார்.
இறைவனின் அன்பு ஆசிய வாழ்க்கையின் நெய்தலில் ஏற்கனவே நெய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகிறோம்.பெனாங்கில் நடைபெறும் மிகப்பெரும் நம்பிக்கையின் புனித திருப்பயணம் ,இந்த அர்ப்பணிப்பை ஆழப்படுத்தும் அழைப்பு.எமது எதிர்காலம் அனைத்து மதங்களின் அயலவர்களுடனும் பகிரப்பட்ட ஒன்று என்பதை ஒரே ஆசிய திருச்சபையாக நாம் உறுதிப்படுத்த அழைக்கிறது.
இறுதியாக இந்த திருப்பயணம் , ஆசிய திருச்சபையின் வழி —தாழ்மையான, கருணையுள்ளவர்கள் , அருகில் இருப்பதன் மூலம் சாட்சியான திருச்சபையாக உருவாக்க முடியும்