மகத்தான நம்பிக்கையின் திருப்பயணிகள் | Veritas Tamil
மகத்தான நம்பிக்கையின் திருப்பயணிகள்
மகத்தான நம்பிக்கையின் திருப்பயணம் (GPH) 2025 நவம்பர் 20–27 வரை மலேசியாவின் பினாங்கில் நடைபெறுகிறது. இது “எங்கள் கத்தோலிக்க அடையாளத்தில் வேரூன்றி, ஆசியாவின் செழுமையான கலாச்சார ஒலியோடு ஒத்திசைவாக இணையும் புதிய பாதைகள் மற்றும் புதிய இயக்கங்களை உரையாடலுடன் கண்டறிதல்” என்பதைக் கண்முன்நிறுத்துகிறது. மேலும், “ஆசிய மக்களாக ஒன்றிணைந்து பயணிப்பது… மற்றும் அவர்கள் வேறு வழியில் சென்றார்கள்” என்ற ஒன்றாகப் பயணிப்பதில் உள்ள சவால்களின் பார்வையையே மகத்தான நம்பிக்கையின் திருப்பயணம் முன்வைக்கிறது.
இந்த GPH, கடந்த ஆண்டு முடிவடைந்த திருச்சபையின் சமீபத்திய சினோடல் பயணத்தின் பின்புலத்தில் உருவாகியுள்ளது. இது உலகளாவிய திருச்சபைக்கு மீண்டும் ஒரு கூட்டிணைவு, பங்கெடுப்பு மற்றும் நட்புறவை நோக்கித் தள்ளுகிறது. ஆசிய மக்களாக ஒன்றிணைந்து பயணிப்பது பல உருக்கமான பரிமாணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதாய் உள்ளது.
திறந்த, உணர்வுபூர்வமான, பதில் அளிக்கும் இதயம் என்பது அடிப்படைத் தேவையாகும். Dilexit Nos (“அவர் நம்மை நேசித்தார்”) என்ற தனது என்சைக்கிளில் திருத்தந்தை பிரான்சிஸ், நமது மதிப்பை மீண்டும் கண்டடையவும், பிறருக்கு திறந்த மனதோடு இருக்கவும், உலகில் செயல்பட ஆன்மீக ஆற்றலை பெறவும் நம் இதயத்துக்குள் பயணிக்க அழைக்கிறார்.
தன் முதல் முக்கிய ஆவணம் Dilexi Te (“நான் உன்னை நேசித்தேன்”) புத்தகத்தில், திருத்தந்தை லியோ XIV, கட்டமைப்பு அடிப்படையிலான ஏழ்மைச் சிக்கல்களை சமாளிக்கும் திருஅவையாக நாம் இருக்க வேண்டும் என்று நினைவூட்டுகிறார்.
கருணை, ஒற்றுமை மற்றும் ஆதரவு ஆகியவற்றுடன் புலம்பெயர்ந்தோரைச் சேர்த்துக்கொள்வது திருச்சபையின் பார்வையின் மையமாகும். 2017 ஆம் ஆண்டு பங்களாதேஷ் பயணத்தின் போது, ரோஹிங்க்யா மக்களை தனது “சகோதரர்கள்” எனக் கூறி திருத்தந்தை பிரான்சிஸ் வலுவான நிலைப்பாட்டை எடுத்தார். Dilexi Te ஆவணத்தில், திருத்தந்தை லியோ XIV அவர்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு அருகிலிருக்க வேண்டிய நமது பொறுப்பை வலியுறுத்துகிறார்.
ஆசியா தற்போது 19 உள்நாட்டு ஆயுத மோதல்களின் தளமாக உள்ளது — ஆப்கானிஸ்தான், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல ஆயுத குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
திருச்சபை ஆயுதப் போட்டி, அணு ஆயுதப் பரவல் மற்றும் அனைத்து வகை வன்முறைகளையும் தொடர்ந்து கண்டித்துள்ளது. அஹிம்சையின் தூதரான மகாத்மா காந்தியை இந்தியா உலகிற்கு அளித்தது ஒரு முக்கிய பங்களிப்பு.
“அவர்கள் தங்கள் பட்டயங்களை உழவு கருவிகளாகவும், ஈட்டிகளை வெட்டுக்கோடிகளாகவும் மாற்றுவார்கள்;
ஜாதி ஜாதிக்கு விரோதமாக பட்டயம் ஏற்றார்; இனி அவர்கள் போரைக் கற்றுக்கொள்ளமாட்டார்கள்.”
ஆசியாவின் பல நாடுகளில் ஜனநாயகம் மெல்ல மெல்ல சிதைக்கப்படுகிறது; அரசியல் மற்றும் நிறுவனங்கள் தனிநபர் லாபத்திற்காக முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன. நிறுவனங்கள் மற்றும் சில அரசியல் பகுதிகள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றன.
மதத்தின் பெயரில் சமூகத்தைப் பிரிக்கும் தீவிரவாத, அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக குடிமை சமூகம் மற்றும் ஒத்த மனப்பான்மை கொண்ட குழுக்களுடன் கிறிஸ்தவர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
திருச்சபை இம்மதங்களின் அழகு, நன்மை ஆகியவற்றை உணர்ந்து, உள்வாங்கி, உரையாடி, பரஸ்பர மரியாதையுடன் மனிதாபிமானமும் சமத்துவமும் நிறைந்த உலகை நோக்கி நகர வேண்டும்.
உலகின் மொத்த இளைஞர்களில் 60% ஆசியாவில் உள்ளனர். ஆனால் வேலைவாய்ப்பு இழப்பு, மனநலப் பிரச்சினைகள், கல்வி இடைவெளி, அரசியல் மற்றும் சமூகவியல் சிக்கல்கள் என பல சவால்கள் அவர்களை சூழ்ந்துள்ளன. நேபாள், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளில் இளைஞர்கள் வழிநடத்திய போராட்டங்கள் இதற்குச் சாட்சியம்.
ராஞ்சியிலிருந்து GPH-இல் பங்கேற்கும் இளம்பேராசிரியர் திருமதி ஸ்நேகா வயலட் கிந்தோ கூறும் எதிர்பார்ப்பு என்னவென்றால் “ஆசிய இளைஞராக, திருச்சபை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாறி, இளைஞர்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் நான் நம்பிக்கை கொள்கிறேன்… இளைஞர்களின் கருத்துகளை திருச்சபை உண்மையாக எடுத்துக் கொண்டு மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதனால் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பிரார்த்தனையின் மூலம் ஆன்மீக மற்றும் உணர்ச்சி வளம் பெறுவர். கிறிஸ்துவின் அன்பை அனுபவிக்க திருச்சபை இளைஞர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்.”
இறுதியாக ,எங்கள் முன் பணிகள் தெளிவாக உள்ளன. ஆசியக் கத்தோலிக்க திருச்சபை ஆழ்ந்த நம்பிக்கையுடன், தைரியத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய நேரம் இது. இயேசு எப்போதும் நம்மோடு இருப்பார் என்ற நம்பிக்கை நமக்குண்டு. இது இப்போது தொடங்க வேண்டிய புனிதப் பயணம்.