உறவே நட்பு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.10.2024

கடுகுத் தவறை கடலளவாக்கி
கலைந்துபோகும் உறவுகள்...
சின்னச் சின்னச் சிக்கல்களில்
சிதறிப்போகும் சிநேகங்கள்.
எத்தனை பிணக்குகள்
எத்தனை பிரிவுகள்.
உறவே நட்பே
ஒன்றுரைப்பேன்
நானும் நீயும்
நாளையேகூட
மரணித்துவிடலாம்
நம்மையும் மிஞ்சியா
நம் வெஞ்சினம்
வாழ்வது?
காலம் நம்முன்னே
காணாமல் போகிறது
நாளையப் பொழுதுகள்
நம்வசம் இல்லை.
இன்றே விரைந்து வா
கைகுலுக்கி
கவலை மறப்போம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நன்னெறியும் நற்பண்புகளும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
