எம் தேவை அமைதி. ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 08.05.2025

எவருக்கும் போர் குறித்த அச்சங்கள் இல்லை, போரினை ஏதோ மசாலா திரைப்படம் பார்ப்பது போல எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனை விடவும் தாக்குதல் நடத்தியதை மக்களிடம் இத்தனை நேர்த்தியாக அரசு கொண்டு சேர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் என்னவென எவரும் யோசிக்கவும் தயாராக இல்லை. போரினை வெறுப்பவர்கள் தேசத்துரோகிகள் இல்லை மக்களே! அவர்கள் அமைதியை விரும்புபவர்கள். நாம் என்ன குறைந்தவர்களா?  அமைதியை நம்மை விட வலிமை குறைந்தவர்கள் அல்லவா எதிர்பார்க்க வேண்டும் என்கிற வஞ்சத்தில் மக்கள் மனங்கள் ஊறிக் கிடக்கின்றன. 

கணவனை இழந்த கைம்பெண்கள் பொட்டு வைக்கக்கூடாது பூ வைக்கக்கூடாது என்கிற காலாவதி ஆகிப்போன கருத்தைத் தூக்கிப் பிடிக்கிற சிந்தூரம் பெயரே அபத்தம். இதற்கு வடக்கத்தியர்கள் வேண்டுமானால் அறியாமையில் குதூகலிக்கலாம். கற்றறிந்த ஓரளவுக்கு சிந்தனையில் முன்னேறிய தமிழர்களே இதனைக் கொண்டாடும் போது வடக்கில் இதன் தாக்கும் என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.

இந்தியா என்பது இந்துக்களின் நாடு அல்ல. இந்துக்களுக்காக செய்யப்படும் பழிவாங்கல் போலான சித்திரத்தை தருகின்ற எந்த பதில் தாக்குதல்களும் உள்நாட்டுக்குள் ஒற்றுமையை விதைக்காது. அது மேலும் மேலும் பிளவுகளையே உண்டாக்கும்.

வரலாற்றில் எந்தப் போரும் பொதுமக்களுக்கு நன்மை விளைவித்தவை அல்ல. 
போருக்கு அஞ்சுவதுதான் பண்பட்ட மனதின் வெளிப்பாடு.
போரினை எதிர்ப்பதுதான் மனிதத்தைக் காப்பாற்றும் வழி.

எம் தேவை அமைதி.

----சாமானியன்

ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி