தமிழக ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழு முப்பெரும் விழா | Veritas Tamil

கடந்த மார்ச் 20 ரூ 21 தேதிகளில் தமிழ்நாடு ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழு முன்னெடுப்பில் முப்பெரும் விழா வேளாங்கண்ணிஇ திருத்தல தியான மையத்தில் நடைபெற்றது. வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநில ஆய்வரங்கத்தோடு இணைந்துஇ இரண்டாம் வத்திக்கான் சங்க நிறைவின் பவள விழா (1965-2025) மற்றும் புனித தேவசகாயம் இந்தியப் பொதுநிலையினர் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதின் மகிழ்வின் விழா என்று முப்பெரும் விழாவாக தமிழகத்தின் 18 மறைமாவட்டங்களிலிருந்தும் ஏறக்குறைய 400 நபர்கள் கலந்து கொண்டுஇ ஆர்வத்தோடு பங்கேற்று பயன் பெற்றனர். 
20-ம் தேதி சனிக்கிழமை 09.00 மணிக்கு இறைவணக்கத்தோடு தொடங்கிய முப்பெரும் விழாவின் தொடக்க அமர்வில் மாநில செயலர் அருட்பணி. மரிய மிக்கேல் அவர்கள் முப்பெரும் விழாவின் நோக்கம் பற்றியுமஇ; பொதுநிலையினர் உருவாக்கத்தில் பணிக்குழு கடந்த 36 ஆண்டுகள் ஆற்றிய பணிகளையும் விளக்கிக் கூறியதோடு பொதுநிலையினர் வெறும் பார்வையாளர்களாக இருந்த நிலைமாறி இன்று இந்தியாவில் பெருமைப்படும் அளவிற்கு தமிழகத்தில் பொதுநிலையினர் ஈடுபாடுஇ பங்கேற்பு அமைப்புகளில் வளர்ந்திருப்பதற்கு பொதுநிலையினர் பணிக்குழு மாபெரும் பங்காற்றியுள்ளது என்று கூறிஇ  இரண்டு நாள் நிகழ்வுகளில் முழுமையாகவும்இ ஆர்வத்தோடும் கலந்து கொண்டு பயன்பெற கிறித்தவ நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.
முப்பெரும் நிகழ்வின் முத்தாய்ப்பாக புனித தேவசகாயம் விருது–2026இ 18 நபர்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. சமூகத்தின் பல்வேறு நிலைகளில் சாட்சிய வாழ்வு வாழ்ந்து வரும் மறைமாவட்டத்திற்கு ஒருவரை தேர்வு செய்து பணிக்குழுத் தலைவர் மேதகு ஆயர் சகாயராஜ் இந்த விருதை வழங்கினார்.
இரண்டாம் வத்திக்கான் சங்க நிறைவின் பவள விழா நினைவுப் பரிசாக பங்கேற்ற அனைவருக்கும்  2-ம் வத்திக்கான் சங்க ஏடுகளின் தொகுப்பு நூல் வழங்கப்பட்டது.
தொடக்க அமர்வைத் தொடர்ந்து முதல் அமர்வில் “புனித தேவசகாயத்தின் ஆன்மீகம் நமக்கு விடுக்கும் சவால்” என்ற தலைப்பில் அருள்முனைவர் வில்சன் (கோட்டாறு மறைமாவட்டம்) உரை நிகழ்த்தினார்கள். பணிக்குழுவின் துணைத் தலைவர் செல்வி. மார்சலின் ரெஜுலா இந்த அமர்வை நெறிப்படுத்தினார்கள்.
தொடர்ந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலி புனித தேவசகாயம் இந்தியப் பொதுநிலையினர் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதின் மகிழ்வின் விழாவாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து  மறைமாவட்டச் செயலர்களும் பவனிவர ஆயர் தலைமையில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலி நிறைவில் புனித தேவசகாயம் உருவம் தாங்கிய செப அட்டை வெளியிடப்பட்டுஇ அனைவராலும் இணைந்து செபிக்கப்பட்டது. இந்த செப அட்டை தலா 500 வீதம் அனைத்து மறைமாவட்டங்களுக்குமஇ; செயலர்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
இரண்டாவது அமர்வானது “பொதுநிலையினர் எழுச்சியே திருச்சபையின் வளாச்சி”  என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த அமர்வில் அருள்முனைவர். தே. அல்போன்ஸ் (கோட்டாறு மறைமாவட்டம்) சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். தமிழ்நாடு கத்தோலிக்க சங்கத் தலைவர் திருமிகு. வின்சென்ட் வேதராஜ் அமர்வை நெறிப்படுத்தினார்கள். 
அன்றைய நாளின் மாலைஇ மூன்றாம் அமர்வானது இரண்டாம் வத்திக்கான் சங்க நிறைவின் பவளவிழா நினைவாக “இரண்டாம் வத்திக்கான் சங்கம்: தாக்கம்இ வளர்ச்சிஇ இன்றைய சவால்” என்ற தலைப்பில் பவுல் குருமட பேராசிரியர் அருள்முனைவர். சந்தியாகு ராசா உரை நிகழ்த்தினார்கள். திருமிகு. லூர்துசாமிஇ பணிக்குழுவின் இணைச்செயலர்  அமர்வை நெறிப்படுத்தினார்கள்.
முப்பெரும் விழாவின் இரண்டாம் நாளின் முதல் நிகழ்வாக பேராலயத்தில் செங்கல்பட்டு  ஆயர்  மேதகு நீதிநாதன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. 
நான்காம் அமர்வின் தொடக்கத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தனது 101-ம் வயதில் மரித்த உண்மைக்கும்இ நேர்மைக்கும் சாட்சியாய் வாழ்ந்த அரசியல்  பெருமகனார் நல்லகன்னு அவர்களுக்கு அஞ்சலியும்இ வணக்கமும் செலுத்தப்பட்டது.
நான்காம் அமர்வானது “இன்றைய தமிழக அரசியல் சூழல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. மக்கள் கண்காணிப்பக மாநில ஒருங்கிணைப்பாளர் திருமிகு. வழக்கறிஞர் ஆசீர்வாதம் உரை நிகழ்த்தினார்கள். பொதுநிலையினர் பேரவைத் தலைவர் திருமிகு. வழக்கறிஞர் ஆரோக்கியசாமி இந்த அமர்வை நெறிப்படுத்தினார்கள்.
தொடர்ந்த ஐந்தாம் அமர்வானது திருநெல்வேலிஇ வான்முகில் இயக்குநர்இ திருமிகு வழக்கறிஞர் பிரிட்டோ அவர்களால் “இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே நமது அரண்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இந்த அமர்வை கிறித்தவ வாழ்வுரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. ஜேம்ஸ் விக்டர் நெறிப்படுத்தினார்கள்.
நிறைவு அமர்வில் பணிக்குழுவின் மாநில செயலரும்இ  நிகழ்வுகள் அனைத்தையும் நேர்த்தியாக திட்டமிட்டு வழிநடத்திய அருட்பணி. மரிய மிக்கேல் இரண்டு நாட்களும் கேட்ட கருத்துக்களை நண்பர்களஇ; அன்பியங்கள் மற்றும் சார்ந்திருக்கும் அமைப்புகளோடு பகிர்ந்து பரவலாக்கம் செய்ய அழைப்பு விடுத்ததோடுஇ ஆர்வத்தோடு கலந்து கொண்ட அனைவருக்குமஇ; வாழ்த்துக்களையும்இ பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். பணிக்குழு நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு ஆர்வத்தோடு கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்கள். பணிக்குழுவின் பொருளர் திருமிகு. அலெக்ஸ் அனைவருக்கும் நன்றி கூறஇ ஆயர் நீதிநாதன் அவர்களின் ஆசியுரையோடு முப்பெரும் விழா இனிதே முடிவுற்றது.
பணிக்குழுத் தலைவர் மேதகு ஆயர் சகாயராஜ்இ பேராலய அதிபர் பேரருட்திரு. இருதயராஜ்இ திருத்தல தியான இல்ல இயக்குநர் அருட்பணி. செபாஸ்டின்இ வரலாற்றுச் சிறப்புமிக்க முப்பெரும் விழாவை மிக நேர்த்தியாக  திட்டமிட்டு, நடத்தி முடித்த பணிக்குழுவின்  மாநில செயலர் அருட்பணி. மரிய மிக்கேல்இ பணிக்குழுவின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களஇ;  மறைமாவட்ட செயலர்கள்இ தியான இல்ல பணியாளர்கள் தன்னார்வத் தொண்டர்கள்இ கலந்து கொண்டு பயன்பெற்ற அனைத்து கிறித்தவ நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.


அருள்பணி. மரிய மிக்கேல்
செயலர்இ தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு.
திருச்சி.