உலகொர் மீட்புக்கு நம்பிக்கையின் சாட்சிகளாக வாழ்வோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 13ஆம் வாரம் – வெள்ளி
திருத்தூதர் புனித தோமா -விழா (இந்தியாவில் பெருவிழா)
எசாயா 52: 7-10
எபே 2: 19-22
யோவான் 20: 24-29
உலகொர் மீட்புக்கு நம்பிக்கையின் சாட்சிகளாக வாழ்வோம்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுளின் மனுக்குல மீட்பு, அமைதி மற்றும் அவரது மாட்சியானது உலகம் முழுவதும் வெளிப்படும் என்பதை வலியுறுத்தி போதிக்கிறார். கிறிஸ்தவ பார்வையில், இந்த நற்செய்தி இறுதியில் இயேசு கிறிஸ்து மூலம் நிறைவேறியதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த நிறைவேறலுக்கு அவரது திருத்தூதர்கள் பங்கு அளப்பரியது என்று அறிவுறுத்தப்படுகிறோம்.
இரண்டாம் வாசகம்.
இவ்வாசகப் பகுதியில் பவுல் அடிகள், இறைமக்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கையிடுகிறார்.
மேலும், திருத்தூர்களும் இறைவாக்கினரும் இயேசு கிறிஸ்துவை மூலைக்கல்லாக கொண்டு அமைத்த அடித்தளத்தின் மேல் எழுப்பப்பட்ட தூய திருஅவையாக உள்ளன்ர என்ற படிப்பினையை ஊட்டுகிறார். தொடர்ந்து, தூய ஆவியின் செயலால், இறைமக்கள் கடவுள் வாழும் இல்லமாக உள்ளனர் உன்று அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி
இந்தப் பகுதியில், இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவரது முதல் தோற்றத்தின்போது, தோமா அவரைக் காணவில்லை. மற்ற சீடர்கள், "நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்" என்று சொன்னபோதும், தோமா இயேசுவின் கைகளிலுள்ள ஆணி அடையாளங்களையும், அவரது விலாவிலுள்ள காயத்தையும் பார்த்து தொட்டால்தான் நம்புவேன் என்று கூறினார்.
எட்டு நாட்களுக்குப் பிறகு, சீடர்கள் மீண்டும் ஒன்றுகூடியிருந்தபோது, இயேசு அவர்கள் நடுவில் தோன்றி தோமாவிடம் தனது கைகளையும் விலாவையும் பார்த்து, நம்பிக்கையற்றவனாக இல்லாமல் நம்பிக்கைக் கொண்டவராக இரு என்று கூறினார்.
அப்போது தோமா, "என் ஆண்டவரே என் கடவுளே !" என்று இயேசுவை அறிக்கையிட்டார். அதற்கு இயேசு, "நீ என்னைக் கண்டதால் நம்பினாய்; காணாமலேயே நம்புபவர்கள் பேறுபெற்றோர்’ என்று கூறினார்.
சிந்தனைக்கு.
இன்று திருத்தூதர் தோமாவின் (தோமையார்) விழாவைக் கொண்டாடுகிறோம். இந்தியாவின் திருத்தூர் என்று அழைக்கப்படுவதால், இங்கே இவ்விழா பெருவிழாவாக உள்ளது.
அன்றைய நற்செய்தியைக் கூர்ந்து கவனித்தோமானல், தோமாவின் சந்தேகத்திற்கு மத்தியிலும் இயேசு பொறுமையுடன் பதிலளித்ததை அறிகிறோம். உண்மையான நம்பிக்கையானது, காண்பதிலேயே அல்ல, கடவுளின் வார்த்தையை நம்புவதிலும் இருக்கிறது என்பதுத் தெளிவாகிறது. உணமையில், இயேசுவை ஆண்டவராகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொள்வதே கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வின் மைய என்ற உண்மையை இன்று நமக்கு வலியுறுத்தப்புகிறது.
இவ்வகையில் நம்மைம் போன்று இயேசுவை நேரில் காணாமலேயே அவரில் நம்பிக்கை கொள்பவர்கள் பேறுபெற்றோர் என போற்றப்படுகிறார்கள்.
Top of Form
புனித தோமையார், இயேசுவின் உயிர்த்தெழுதலை சந்தேகித்தவராகவே பெரும்பாலும் நினைவுகூரப்படுகிறார். ஆனால், கடவுள் அவரை மாட்சிமிகு வழிகளில் பயன்படுத்தினார். அனைத்து வல்லமையும் கொண்ட கடவுள், தோமையாரின் அந்தச் சந்தேகத்தைக்கூட திருஅவைக்கு அருளின் ஊற்றாகவும், உண்மையான நம்பிக்கைக்கும் மனமாற்றத்திற்கும் ஒரு முன்மாதிரியாகவும் மாற்றினார்.
தோமையாரின் வாழ்வில், சந்தேகத்திலிருந்து நம்பிக்கைக்கு, இல்லாமையிலிருந்து நம்பிக்கை அறிக்கைக்கு, அச்சத்திலிருந்து அமைதிக்கு செல்லும் ஒரு ஆன்மீகப் பயணத்தை நாம் காண்கிறோம். அதே பயணத்தை நாமும் மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்பாக இது நம் ஒவ்வொருவருக்கும் அமைகிறது.Bottom of Form
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை நேரில் சந்தித்தபின், தோமா முற்றிலும் மாற்றமடைந்தார். அந்த முக்கியமான தருணத்தில், அவர் திருவிவிலியத்தில் உள்ள மிக உயர்ந்த விசுவாச அறிக்கைகளில் ஒன்றாகிய “என் ஆண்டவரே, என் கடவுளே” என்று அறிக்கையிடுகிறார்.
இந்த ஆழமான யம்பிக்கை அறிக்கையின் மூலம், கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை அவர் தெளிவாக அறிவிக்கிறார். சந்தேகித்த சீடராக இருந்த தோமா, உறுதியான விசுவாசமுள்ள திருத்தூதராக மாறி, பின்னர் உலகத்தின் எல்லைகள்வரை (இந்தியா வரை) சென்று கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருப்பதற்காக அனுப்பப்படுகிறார். அங்கே மறை சாட்சியாக கொல்லப்படுகிறார். அவரது கல்லரையை, சென்னை மைலாப்பூரில் இன்று காண்கிறோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை நேரில் காணாமல் இருந்தாலும், நற்கருணையில் உமது உடனிருப்பை முழு மனதுடன் நம்பி, "என் ஆண்டவரே! என் கடவுளே!" என்று அறிக்கையிடும் அருளை எனக்கு என்றும் அளிப்பீராக. ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452