புனித சனி | ஆர்.கே. சாமி | Veritas Tamil

நேற்று, பெரிய வெள்ளி,  திருப்பலி என்னும் புனித பலி ஒப்புக்கொடுக்கப்படாவிட்டாலும்,  நம் ஆண்டவரின் திருவுடலும் இரத்தமுமாகிய நற்கருணையைப் பெற்றுக்கொண்டோம்.  எனினும், இன்று திருஅவை ஆழ்ந்த மௌனத்திலும் தியானித்திலும்  மூழ்கியுள்ளோம். 
இன்றைய பகலில்  எந்தத் திருவழிபாட்டுச் சடங்குகளும் கொண்டாடப்படுவதில்லை. ஆலயங்களில்  நற்கருணைப் பேழை காலியாகவே இருக்கும். மேலும் திருஅவை  உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சி நிறைந்த பிரகடனத்திற்காக எதிர்பார்ப்புடன் கூடிய அமைதியில் காத்திருக்கிறது. இந்த அமைதி, கிறிஸ்து மரித்தோர் உலகிற்கு இறங்கிய மறைபொருளுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லவும், அவருடைய தியாகத்தின் அளவிட முடியாத அன்பைப் பற்றித் தியானிக்கவும் நாம் பணிக்கப்படுகிறோம்.

தனது ஞானத்தின்படி, திருஅவை திருப்பலியையும் நற்கருணைப் பெறுதலையும் இன்று மட்டும் தவிரக்கிறது. ஏன்? ஏனெனில், புனித சனிக்கிழமை, தன்னிலேயே ஒரு தனித்துவமான அருளை வழங்குகிறது. இந்த நாளில் நாம் ஏற்கும்  அமைதி என்பது ஒர் இழப்பல்ல, மாறாக அதை பெறுவதற்கான ஓர் ஆழமான வழியாகும்—இந்த அமைதி நமக்கு வழங்கப்படும் ஓர் இறை  கொடை. இது நம்மை நம்பிக்கையிலும் எதிர்நோக்குடன் ஆண்டவரின் உயிர்தெழுதலுக்குக் காத்திருக்கவும் அழைக்கிறது.

பாஸ்கா திருவிழிப்பு வரை எந்த வழிபாட்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறாவிட்டாலும், இந்த தியானத்திறகுரிய அமைதி நாள், சாவின் மீதான (அலகையின் ) கிறிஸ்துவின் இறுதி வெற்றியின் நம்பிக்கையில் இளைப்பாற நம்மை அழைக்கிறது.

அவரில் முழு நம்பிக்கை கொண்ட மக்களாக,  அவருக்காகக் காத்திருப்போம்,  கிறிஸ்துவின் பாடுகளைக் கடந்து அவருடைய உயிர்த்தெழுதலின் மகிமைக்குள் செல்வதற்கு நமக்கான உன்னத தயாரிப்பாக இன்றைய பொழுதைக் கடப்போம்.  

ஆர்.கே.சாமி (மலேசியா)
+6012 228 5452

Tamil Survey Popup Image