கர்நாடக அரசின் 14 வது பட்ஜெட் கூட்டத்தொடரில் நூறு கோடி ரூபாயை கர்நாடக கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக ஒதுக்கியதற்கு பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சோடா, கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குபெறுபவர்களின் பெயர்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது, இதில் முதல்முறையாக கத்தோலிக்க திருஅவை இந்த பேரவையில் வாக்களிக்கும் உரிமை உள்ள பிரதிநிதிகளாக பொது நிலையினரையும் தேர்ந்தெடுத்துள்ளது.
புனித வின்சென்ட் தி பால் சபை உறுப்பினர்கள், கப்புச்சின் சபை துறவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து தென்னிந்தியாவின் பழமையான இருளர் இன பழங்குடி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
1972 ஆம் ஆண்டில் , ஐநா பொதுச் சபை ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. "ஒரே பூமி" என்ற முழக்கத்தின் கீழ் முதல் கொண்டாட்டம் 1973 இல் நடந்தது .
ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப் பிறகு வளர்ந்து வரும் தண்ணீர் நெருக்கடி பற்றி விவாதிக்க உலக நாடுகள் கூடியது. காரணம் உலகளவில் நான்கு பேரில் ஒருவர் பாதுகாப்பான தண்ணீர் சேவைகள் அல்லது சுத்தமான குடிநீர் இல்லாமல் வாழ்கிறார்கள்