இதயத்தின் ஆழத்திலிருந்து உரையாட அழைக்கப்பட்டுள்ளோம் || வேரித்தாஸ் செய்திகள்

சமீபத்தில்  செவ்வாயன்று நடைபெற்ற மூன்று நாள் சிக்னிஸ் ஆசிய பேரவையின் கூட்டமானது தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் மாநகரில் நடைபெற்றது. அதன் தொடக்க உரையில் பேசிய சிக்னிஸ் அமைப்பின் தலைவர் அருள்தந்தை  ஸ்டான்லி கோழிச்சிரா நம் அனைவரையும் இதயத்தின் ஆழத்திலிருந்து உரையாடவும் பிறரின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

சற்று கூர்ந்து நோக்கும்போது இந்த கருத்து எவ்வளவு ஆழமான கருத்து என்பது நமக்கு விளங்கும் ஏன் என்றால் நாம் ஒருவர் மற்றவருடன் உரையாடும்போது மேலோட்டமாக பேசாமல் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசும்போது அங்கே தூய்மையான அன்பும் மனித உறவும் மலருகிறது. ஒரு உறவு மலர அங்கே தகவல் தொடர்பு மிக அவசியமாகிறது. 

இந்த ஆசிய பேரவையின் அங்கமான சிக்னிஸ் மாநாட்டின் கருப்பொருளாக நமது திருத்தந்தையின் இந்த ஆண்டு உலக தகவல் தொடர்பு செய்தியாக வழங்கிய உண்மையான அன்போடு இதயத்தின் ஆழத்திலிருந்து பேசுங்கள் கடவுளின் ஆட்சியை பறைசாற்றிட அன்பை தவிர வேறு மொழி இல்லை என்று திருத்தந்தையின் செய்தியை கூறி சிக்னிஸ் தலைவர் அனைவருக்கும் சிறப்பான செய்தியை வழங்கினார்.

மேலும் நமது திருத்தந்தை கூட்டு ஒருங்கியக்கத்தின் மூலமாக திருஅவையை புரிந்து கொள்ள ஒரு உன்னதமான மனித சமுதாயத்தை உருவாக்கிட, உண்மையான உள்ளங்களை அடையாளம் காண நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் பயணமே இந்த கூட்டு ஒருங்கியக்கம்.

இந்த சிக்னிஸ் அமைப்பானது ஆசியாவிலுள்ள 17 நாடுகளின் உறுப்பினர்களுடன் உலகின் மிக துடிப்பான அமைப்பாக தனது பணியை தொடர்ந்து சிறப்பாக ஆற்றி வருகிறது என்று அருள்தந்தை  ஸ்டான்லி கோழிச்சிராகூறினார்.

ஊடகக் கல்வி, பத்திரிக்கை , சினிமா, தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் உலகம் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளும் ஆறு துறைகள்  உள்ளன, இவை அனைத்தும் அந்தந்த உறுப்பு  நாடுகளுக்கான நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை இளம் ஊடக ஆர்வலர்களுக்கு தேவையான முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன,என்று அவர் விளக்கினார்.

டிஜிட்டல் சாம்ராஜ்யத்தில்  வேகமாக மாறிவரும் பல  துறைகளுக்கு மத்தியில் கடவுளின் அன்பைத் தொடர்ந்து பரப்புவதற்கு அருள்பணியாளர்கள், இருபால் துறவியர்  மற்றும் இறை மக்களின் மனதை படிக்க அவர் அழைப்பு விடுத்தார்.

"கத்தோலிக்க சமூக ஊடக தொடர்பாளர்களான நாம் அனைவரும்  நற்செய்தி மற்றும் கடவுளின் வார்த்தையின் மதிப்பை இந்த உலகிற்கு வெளிப்படுத்துவதற்கு  அழைக்கப்படுகிறோம், உலகில் போர்களும் , நாடுகளிடையே  பிரச்சனைகளும் நிறைந்து சமாதானம் குறைந்து வருகிறது . நல்ல செய்திகளை விட கெட்ட செய்திகளை பரப்புவதில் அதிக ஆர்வம் கொண்ட உலகம் நாம் இப்பொழுது வாழ்ந்து வரும் உலகம் , கொடுமைப்படுத்துதல், இனம்,மொழி, கலாச்சாரம், நிறம்  மற்றும் பாலியல் பாகுபாடுகள் நிறைந்த உலகம் இங்கு  குரலற்றவர்களின் அவநம்பிக்கை நிறைந்த  அழுகுரல்கள் உலகெமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று ஆயர்  கூறினார்

2001 இல் நிறுவப்பட்ட, SIGNIS ஆசியா என்பது SIGNIS இன் ஊடக  குழுக்களில் ஒன்றாகும், இது தகவல்தொடர்புக்கான உலக கத்தோலிக்க சங்கம். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் சமூக ஊடக தொடர்புகள் வழியாக   வழிநடத்தப்பட்டு, அவர்கள் தெற்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில்  உள்ள மக்களுடன் ஊடக தொடர்பு நடவடிக்கைகளை வளர்ப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் உறுப்பினர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர். 

கத்தோலிக்க சமூக ஊடக தகவல்தொடர்புகளைப் பற்றி விவாதிக்கும் ஆசியாவில் உள்ள பல்வேறு பேச்சாளர்களைக் கொண்ட அவர்களின் இந்த ஆண்டுக்கான வருடாந்திர கூடுகை , தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள பான் பு வான் குறிமட பயிற்சி மையத்தில் அக்டோபர் 26 வரை நடைபெற்றுவருகிறது.

-அருள்பணி .வி.ஜான்சன்