ஆண்டவர் திரும்பி வருவார் என்பதுதான் இறைவார்த்தை நமக்குத் தரும் நம்பிக்கையாக இருக்கின்றது. அவரது வருகையானது வெறும் வருகையாக இராது. அது தீர்ப்பிடும் வருகை. அவரது முன்னால் நமது தீயச் செயல்கள் மட்டில் கூனி குறுகி நிற்காமல் இருக்க நம்மை நாம் சீர் செய்துகொள்ள வேண்டும்.
வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா
திருஅவை மக்களாக விண்ணகம் நமது எதிர்நோக்காக இருந்திட வேண்டும். அங்கே பெண் கொடுப்பதுமில்லை, பெண் எடுப்பதுமில்லை. அனைவரும் ஒரே இனம், ஒரே மக்கள் என்ற நிலையில் மகிழ்ந்திருப்போம். கடவுளின் மக்கள் என்ற வகையில் அங்கே அனைவரும் சகோதர சகோதரிகள். வேறு உறவு வகை அங்கே கிடையாது என்கிறார் ஆண்டவர்.
மீட்பு என்பது மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. மனமாற்றம் இல்லையேல் மீட்பு வெறும் பகல் கனவுதான். மனமாற்றத்திற்கு முயற்சி வேண்டும். சக்கேயுவின் முயற்சி அவருக்கு மீட்பதை தேடி தந்தது.
புனித பேதுரு மற்றும் பவுல் ஆகிய இருவரின் கல்லறைகள் மேல் எழுப்பப்பட்ட இந்த இரண்டு பேராலயங்களும் நமது நம்பிக்கை வாழ்வுக்கும் சாட்சிய வாழ்வுக்கும் அடித்தளமாக நிற்பதைப் போல, அவர்களின் வாழ்க்கையும் பணி வாழ்வும் நமது பணி வாழ்வுக்கு உந்துதலாக இருக்கின்றன.
“நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி இறைஞ்சி மன்றாடுவோரின் இறைவேண்டலுக்குக் கடவுள் செவிசாய்க்க மாட்டார?
பவுல் ஒனேசிமை பிலேமோனிடம் திருப்பி அனுப்புகிறார், மேலும் ஒனேசிமை அவரது முந்தைய குற்றத்திற்காக தண்டிக்க வேண்டாம் என்றும், ஒனேசிமை "பயனுள்ள" சகோதரராக ஏற்றுக்கொள்ளுமாறு பிலேமோனிடம் கேட்கிறார்.
ஒரு பணியாளர் வயல்வெளியில் வேலை செய்து நெடுநேரம் உழைத்தப் பிறகு, எஜமானின் வீட்டிற்குள் வந்து எஜமானிடம் உணவளிக்கக் கோருவதில்லை என்பதை இயேசு அவர்களிடம் சுட்டிக்காட்டுகிறார். மாறாக, எஜமானருக்கு உணவு தயாரித்து வழங்குவதன் மூலம் பணியாள் பணிபுரியும் ஒரு நபராகவே இருப்பார் எற்கிறார்.
‘’உன் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கடிந்துகொள்;
அவர் மனந்திரும்பினால், அவரை மன்னியுங்கள்.
மேலும் அவர் ஒரே நாளில் ஏழு முறை உங்களுக்கு தவறு செய்தால்
ஏழு முறை உங்களிடம் திரும்பி வந்து, 'மன்னிக்கவும்,'
நீ அவனை மன்னிக்க வேண்டும்" என்கிறார்.
அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள் என்றும் அவர்களை வாழ்த்துகிறார்.