“நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி இறைஞ்சி மன்றாடுவோரின் இறைவேண்டலுக்குக் கடவுள் செவிசாய்க்க மாட்டார?
மெசியா என்று அறிக்கையிட்ட சீமோனிடம் விண்ணகத்தந்தையே இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் என்றதோடு, அவரது சீமோன் என்ற பெயரை பேதுரு (பாறை) என்றும் அந்தப் பாறையின் மேல் இயேசு தனது திருஅவையைக் கட்டுவார் என்றும் மொழிகின்றார்.
"பூமியில் செல்வங்களை சேமித்து வைக்காதீர்கள், ஏனெனில், அவை நமக்கு நிரந்தரமான செல்வங்கள் ஆகாது என்கிறார். அவை அழிவுக்கு உட்பட்டவை என்றும், பிறரால் திருடப்பட முடியும் என்கிறார்.