CRI புதிய தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்ட அருட்சகோதரி. வினிதா CSJ
இந்தியத் துறவிகள் மாநாட்டின் (CRI) புதிய தேசியச் செயலாளராக அருள்சகோதரி வினிதா பொறுப்பேற்பு.
பிப்ரவரி 11, புதனன்று புது தில்லியில் நடைபெற்ற இந்தியத் துறவியர் மாநாட்டில், 2026–2030 ஆம் ஆண்டு காலத்திற்கான தேசியச் செயலாளராகச் சகோதரி வினீதா CSJ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
போபாலில் உள்ள தன்மயா மாநிலத்தைச் சேர்ந்த சாம்பேரி புனித யோசேப்பு சபை சகோதரிகளின் உறுப்பினரான அருள்சகோதரி வினிதா, ஜூன் 28, 2009 அன்று தனது நிரந்தர வார்த்தைப்பாட்டு வாக்குறுதியை அளித்தார்.
புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள தனது தேசியச் செயலாளரார் பொறுப்பிற்கு, சிறந்த கல்விப் பின்னணி, நிர்வாக ஆளுமை மற்றும் ஆன்மீகப் பணி அனுபவம் ஆகிய அனைத்தையும் ஒரு வலுவான அடித்தளமாக கொண்டுள்ளார் அருள்சகோதரி வினிதா.
அருள்சகோதரி வினிதாஅறிவியல், கல்வி மற்றும் இறையியல் ஆகிய துறைகளில் ஈர்க்கக்கூடிய கல்வித் தகுதிகளைக் கொண்டுள்ளார். அவர் போபாலில் உள்ள சபியா அறிவியல் கல்லூரியில் வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இளங்கலை அறிவியல் பட்டமும் அதனைத் தொடர்ந்து, மூவாட்டுப்புழாவில் உள்ள பிரேனே நாராயணா கல்வியியல் கல்லூரியில் இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்றார்.
மேலும், தில்லியில் உள்ள வித்யாஜோதி இறையியல் கல்லூரியில் இளங்கலை இறையியல் படிப்பையும் அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் குண்டூரில் உள்ள ஜே.எம்.ஜே மகளிர் கல்வியியல் கல்லூரியில் முதுகலை கல்வியியல் பட்டமும் பெற்றார்.
கடந்த பல ஆண்டுகளாக, அவர் ஆசிரியர், பொருளாளர், முதல்வர் மற்றும் பங்கு மற்றும் மேய்ப்புப் பணிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துச் சிறப்புடன் பணியாற்றியுள்ளார்.
அவரது பணிவாழ்வு, சிறந்த நிர்வாகத் திறன்,அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் தலைமைத்துவம் மற்றும் உருவாக்குதல் பயிற்சி அளித்தல் மற்றும் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகிறது.
தற்போது கேரள உயர் அதிகாரிகள் மாநாட்டின் (KCMS) செயலாளராகப் பணியாற்றி வரும் அருள்சகோதரி வினிதா அவர்கள், அங்குள்ள துறவற சபைகளுக்கிடையே ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். மாநில அளவில் அவருக்கு இருக்கும் இந்த அனுபவம், அவரது பதவிக்காலத்தில் இந்தியத் துறவியர் மாநாட்டின் (CRI) தேசிய அளவிலான முன்னெடுப்புகளை வலுப்படுத்துவதற்கும், சபைகளுக்கு இடையிலான ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் கணிசமாகப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியத் துறவியர் மாநாட்டின் தேசியத் தலைமைத்துவக் குழுவில், அருட்பணி. சாஜு சக்காலக்கல் CMI தேசியத் தலைவராகவும், சகோதரி மரியா நிர்மலினி AC, முதல் துணைத் தலைவராகவும், சகோதரர் சந்தோஷ் CSC, இரண்டாம் துணைத் தலைவராகவும் மற்றும் பதவிக்காலம் முடிந்து வெளியேறும் தேசியச் செயலாளராக சகோதரி எல்சா முட்டத்து PBVM அவர்களும் இடம் பெற்றுள்ளனர். தேசிய நிர்வாகக் குழுவானது இந்தியா முழுவதிலும் உள்ள துறவற சபைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ளது.