கல்வித் தூதுவன் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

கல்வி, மனிதரை எந்தப் பேதமுமில்லாமல் மனிதராகவே பார்க்க வைக்கும் அறிவுக் கண்கள்.

12 வயது நிரம்பிய சிறுவன் சக்தி மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன். காஞ்சிபுரத்தில் தியாகி நிதி நாடும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கின்ற சிறுவன் சக்தியை உலகக் குழந்தைகள் அமைதி விருதுக்கு, ஐ. நா. வில் பரிந்துரை செய்துள்ளது பள்ளி நிர்வாகம். அப்படிச் சிறுவன் செய்த சாதனைதான் என்ன!

விற்கப்போவான். தன் வாழ்வில் நட ஊர்களில் திருவிழாக்கள் நடக்கின்றபோது சக்தியின் பெற்றோர் கடைபோட்டுப் பாசிமாலைகள், பொம்மைகள் விற்பார்கள். சக்தி ஊசிமணி, பாசிமணி விற்கப்போவா நடந்த நிகழ்வை சக்தி இவ்வாறு கூறுகிறான்: “ஒருநாள் நானும் அம் திருவிழாவுக்குப் போக நினைத்தோன் நானும் அம்மாவும் பக்கத்து ஊர் ஏறிவிட்டதால் ஒரு தூரமான ஊருக்குச் சென்றுவிட்டோம். க்குச் சென்றுவிட்டோம். ஒருவழியாக மூன்று, நான்கு நாள்கள் கழித்து வீடு வந்து சேர்ந்தோம். ஒருவேளை எனக்குப் ாக்குப் படிக்கத் தெரிந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதே என்று நினைத்தேன். அதனாலேயே பள்ளியில் சேர்ந்தேன். சேர்ந்த தொடக்கத்தில் மற்றப் பையன்கள் என்னைக் கேலி செய்துகொண்டே இருந்தார்கள். அதன்பிறகு காஞ்சி தியாகி நிதி நாடும் பள்ளியில் சேர்ந்தேன். என் அப்பா முதலில் மேல்சட்டைப் போடுவதில்லை. நான் பள்ளியில் படிப்பதைப் பார்த்துவிட்டு மேல்சட்டை போட ஆரம்பித்துவிட்டார். நான் ன்றாகப் படித்து, பெரிய வேலைக்குச் சென்று என் அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ளணும். இதுதான் என என் ஆசை".

சக்தியைப் பற்றி அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை ஜெயலட்சுமி கூறும்போது, "தொடக்கத்தில் பெஞ்சில் உட்காரவே தயங்கிய சக்தி, நாளடையில் ஆங்கிலம் மற்றும் தமிழை நன்றாகக் கற்க ஆரம்பித்து விட்டான். கொஞ்ச நாளில் 'ஊருல இருக்கிற என் கூட்டாளிகளையும் இங்கே கூட்டிட்டு வரலாமா மிஸ் ? நான் மட்டுமல்ல அவங்களும் படிக்கணும்னு' சொன்னான். சக்தி இப்பள்ளியில் சேர்ந்த ஓராண்டுக்குள்ளே தன் இனத்தைச் சேர்ந்த 25 சிறுவர்களை இப்பள்ளியில் சேர்த்துள்ளான். பல தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து மாதக்கணக்கில் செய்ய வேண்டிய பணியை ஒரே ஆளாகச் செய்திருக்கிறான் சக்தி.

எனவேதான் அவனது பெயரை உலகக் குழந்தைகள் அமைதி விருதுக்காக ஐ. நா. வில் பரிந்துரை செய்துள்ளோம்” என்று பெருமைபடக் கூறுகிறார் தலைமையாசிரியை. உண்மையில் சக்தி ஒரு கல்வித் தூதுவன்தானே!

கல்வி அறியாமையை மட்டும் அகற்றவில்லை. சமூகப் பிளவுகளையும் அகற்றிவிடுகிறது.


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image