கேட்போம் கொஞ்சம் காது கொடுத்து| பாரதி மேரி | VeritasTamil
இது என் மனதை தொட்ட கதை ஒரு என்பது வயது 80 முதியவர் தன் வீட்டில் Sofa வில் இருக்கிறார் அவரோடு அவருடைய வயது 45 மகன் அதுவும் அதிகம் படித்த மகன் அங்கு அவருடன் இருக்கிறான்.அந்த தந்தை கேட்கிறார் தன் மகனிடம் எதோ சத்தம் கேட்கிறதே அது என்ன ? அது காகத்தின் குரல் என்றார் அந்த மகன் இன்னும் சில மணித்துளிகள் பிறகு மீண்டும் அவர் அதே கேள்வியை கேட்க அந்த மகன் மிகுந்த எரிச்சல் கொஞ்சம் முகம் சுளித்துக்கொண்டே அப்பா அது ஒரு காகம் காகம் காகம் என்றான் மேலும் அவன் அப்பாவிடன் நான் தான் கூறுகின்றேன் அது காகம் என்று உங்களுக்கு புரியவில்லையா..? என்று முகம் சுளித்தான்
சிலமணிநேரம் கழித்து அந்த வயது முதிர்ந்த தந்தை உள்ளே சென்று ஒரு Diary அதுவும் பழைய Diary ஒன்றை கொண்டு வந்து காட்டினார் அவர் மகனிடம்.அதில் ஒருபக்கத்தில் அவரின் மகன் சிறு வயதில் ஏறக்கூறிய 3 வயதில் இதே கேள்வியை அதாவது காகத்தை கண்டு இது என்ன என்று 23 கேட்டதாகவும் அவர் அப்பா 23 முறையும் சலிக்காமல் கூறியதாகவும் எழுதப்பட்டுள்ளது ஆனால் மகனிடம் தந்தை கேட்ட மூன்றாம் முறையே எரிச்சலும் சலிப்பும் தோன்றியது மகனுக்கு
நான் உங்களிடம் கேட்கின்றேன்…..
நீங்கள் உங்களின் பெற்றோர்கள் வயது ஆகும் போது எவ்வாறு அவர்களை கவனிக்கிறீர்கள் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பல முறை பதில் கூறாமலும் கண்டுகொள்ளாமலும் தானே இருக்கீறீகள்..
நீங்கள் உங்கள் பெற்றோர்களின் உணர்வுகளை அறிந்தும் புரிந்தும் இருக்கீறிர்களா..?
வேடிக்கையான உண்மை எது என்றால் உணர்வுகளை புரிந்து கொள்ள பெற்றோர் அங்கு இல்லாமல் முதியோர் இல்லத்தில் இருந்தால் எப்படி புரிந்து கொள்ள இயலும்.
சிந்திப்போம் …
குடுபத்தின் முக்கியம் நம் பெற்றோர்கள் முதிய வயதில் இருக்கும் இவர்களின் மனம் குழந்தை போன்றது என்று மறுக்கமுடியாது.. கேட்போம் அவர்களின் உணர்வுகளை கொஞ்சம் காது கொடுத்து…