மிகப்பழங்கால கிரேக்க கணித மேதை பித்தகோரஸ். இவரது காலம் கி.மு. 582-500. இவர் துருக்கிக்கு அப்பால் உள்ள சாமோஸ் என்ற தீவில் கி.மு. 582இல் ஓர் செல்வகுடியில் பிறந்தவர். இளமையிலேயே சிறந்த நுண்ணிய அறிவும், ஆர்வமும் பெற்று விளங்கினார். ஆரம்பகாலத்தில் இவரது கேள்விக்கு ஆசிரியர்களே விடை கூறமுடியாது இருந்தது.
துணிவுக்கும், வீரத்திற்கும் வரலாற்றில் ஒரு பெயர் தான் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte), ஜெனோவாவால் பிரான்ஸிற்கு விற்கப்பட்ட கார்ஸிகா என்னும் சிறிய தீவில் உள்ள ஐயாட்சோ என்ற சிறிய கிராமத்தில் 1769 ஆகஸ்ட் 17இல் நெப்போலியன் பிறந்தான்.
இத்தாலி நாட்டின், பண்டைய மிகச் சிறந்த சிற்பி ஆஞ்சலோ. இவருடைய முழுப்பெயர் மைக்கேல் ஆஞ்சலோ (Michel angelo). இவரது காலம் 1475-1564. இவர் மிகச்சிறந்த ஓவியர்.
மிகச் சிறந்த ஆங்கில நாடக ஆசிரியர் இவர். அதோடு மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞரும்கூட. இவர் எழுதிய நூல்கள் உலகப்புகழ் பெற்றவை. உலகின் பல மொழிகளில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
எந்த ஒரு கருத்துக்கும் ஒரு மறுப்பு உண்டு. காலத்தின் மாறுதலாய் அது ஏற்படுவதுண்டு. இந்து மதத்தில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு தீர்வாக புத்தமும் சமணமும் தோன்றியது.
பண்டைய உலகம் தந்த அறிவியல் வல்லுனர்களின் வரிசையில் நாம் மறவாது அறியப்பட வேண்டியவர் கலிலியோ. இவர் இத்தாலி தந்த அறிஞர். இத்தாலியில் சாய்ந்த கோபுரம் உள்ள பைசா நகரே இவர் பிறப்பிடம். இவரது காலம் 1564-1642.
மார்க்கோபோலோ சீனா சென்றுவரும் வரை சீனா பற்றியோ, மற்ற ஆசியா நாடுகள் பற்றியோ ஐரோப்பா அதிகம் அறிந்திருக்கவில்லை. கான்ஸ்டாண்டி நோபிளை, துருக்கியர்கள் கைப்பற்றியதால், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு தரைவழி தடுக்கப்பட்டது.
மிகப் பழங்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்த வரும், பல நாடுகளைக் கண்டவரும், பல வரலாற்றுக் குறிப்புகளுக்கு ஆதாரமாகவும் விளங்கிய மார்க்கோ போலோவை நாம் 'பயண நாயகர்' எனலாம்.
பண்டைய கிரேக்கத்திற்கு இணையாக விளங்கியது ரோம். நாகரிகம், இலக்கியம், கலை, ஓவியத்திற்கு புகழ்பெற்றது ரோம் கட்டடக்கலை, சிற்பக்கலையின் பிறப்பிடம் இது. உலக நாகரிகத்திற்கு ரோமின் நன்கொடை மிக மிக அதிகம்.
ஆசிய நாடுகளில் இந்தியா போன்று நாகரிகமிக்க நாடு சீனா. பழங்கால கிரேக்கம் போன்ற தத்துவம், ஐரோப்பிய நாடுகளைப் போன்ற தொழில்வளம், உலக மதங்களில் இருந்து மாறுபட்ட புத்தமதம் என்று பலவழி களில் வேறுபட்டு, மாறுபட்டு உயர்ந்து நிற்கும் நாடு சீனா.
தத்துவம் என்பது என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள். இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர்.