புத்துணர்ச்சி ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.09.2024

புறப்படு உன் புத்துணர்ச்சியோடு.
நடந்திடு உன் நம்பிக்கையோடு.
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்து விட்டுப்போகாதே.
நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்.
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்.
உன் வலிமைகளை திறமைகளை முயற்சிகளை உன்னை நீயே நம்பாவிட்டால் யார் உன்னை நம்புவார்கள்.
நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்
அதைத் துப்பி விடாதே.
எல்லாம் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. எல்லாம் சரி செய்து விடலாம் என்பது தன் நம்பிக்கை.
எல்லாம் சரி செய்து தான் ஆக வேண்டும் என்பது தான் வாழ்க்கை முயற்சி பண்ணுங்க வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் பொறுமையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மாமரியே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
