வாழ்க்கை கணக்கு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.04.2025

வாழ்வில்
அன்பை கூட்டிக்கொள்!
அந்த (+)  கூட்டல்கள் ஈட்டித் தரும்
உனக்கு சந்தோஷத்தை.

வாழ்வில் நட்பை பெருக்கிக் கொள்!
அந்த (× ) பெருக்கல்கள் உன் வாழ்வு முடிந்த பின்பும் வாழும் அவர்கள் நெஞ்சில்.

வாழ்வில் வாழும் முறைகளை (÷ )
வகுத்துக் கொள்.
அந்த வகுத்தல்கள் உன் வாழ்வை வளர்பிறையாக்கும்.

வாழ்வில் சோகத்தை கழித்துக் கொள்! 
அந்த (-) கழித்தல்கள், உன்னை அழித்தல்கள் இல்லாத ஓவியமாய் காட்டும்.

வாழும் வாழ்வினை சமமாக்கி கொள்.(=)
வேறுபாடு இல்லாத சமூகம் வேரில்
கிளைதளைக்க அது பயன்படும்.

வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கண்டுகொள்.(< >)  
உன்னை வார்த்தெடுத்த தங்கமாய்
மாற்றி அமைக்கும்.

வாழ்வின் குறைநிறைகளை கண்டறிந்து கொள்.(+-)
வசந்தமாய்.உன் வாழ்வு மாற அது வகை செய்யும்.

வாழ்க வளர்க

இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எம் மக்களுக்கு சகிப்புத்தன்மையும் ஒற்றுமையும் நற்ச்சிந்தனையும் நல்லோழுக்கமும் கிடைக்கவும் எம் திருத்தந்தை பிரான்சிசு அவர்களின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியடைய நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி

வாழ்க்கை கணக்கு