நல்ல வாழ்க்கை வாழ: || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.06.2024

                                                        நல்ல வாழ்க்கை வாழ

நான் வாழ பிறந்தவன் என்ற நம்பிக்கை.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தீர்க்கமான தீர்மானம்.

விவேகத்துடன் கூடிய அக மகிழ்வு.

தோல்வியை கண்டாலும் துவளா மனம்.

நேர்க்கொண்ட பார்வை.

எதிர்காணும் துணிவு.

இயன்றதையும் ஈட்டியதையும் இயல்பாக கருதும் மனநிலை.

முயற்சியின் போது "நான்" என்ற எண்ணமும் பலன் காணும் போது "நாம்"என்ற மனதுடன் வாழ்வது.

சுற்றம் சூழ வாழ்வது.

சோகத்திலும் சுகம் காணும் மன பக்குவம்.

செல்வத்தில் சிக்கனம், 
உழைப்பில் உற்சாகம், 
சொந்தத்தில் குதூகலம், தேவையில்லா தர்க்கங்கள் வாக்குவாதங்கள் தவிர்ப்பது.

கடன் இன்றி போதும் என்ற மனதுடன் வாழ்வது.

தன் உயர்விலும் தாழ்விலும் நமக்கு தாழ் நிலையில் உள்ளவர்களையே நோக்க பழகிக்கொள்ள வேண்டும்.

சகிப்பு வேண்டும் மன சஞ்சலமின்றி.

சந்தோஷம் வேண்டும் நம்மை சார்ந்தவர்களை பாதிக்கா வண்ணம்.

சந்தேகம் வேண்டாம் அது சாத்தானை விட கொடியது வாழ்வை அழிக்க.

நேர்மறையான எண்ணமும், எதிர்கொள்ளும் நிகழ்வுகளை நேசிக்கும் மனமும் வேண்டும்.

பதட்டம் பயம் நீங்கிய மனம்,

பிறர் சிரிப்பில் இறைவனை காணும் மனம்.

இவையே நல்ல வாழ்க்கை வாழவும் 

தனக்கு தானே செய்து கொள்ள வேண்டிய ஒப்பந்தங்கள்.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க வளர்க 

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி