வன்முறை அதிகரிக்கும் நிலையில் உரையாடலுக்காக திருத்தந்தை அழைப்பு ! | Veritas Tamil

வன்முறை அதிகரிக்கும் நிலையில் உரையாடலுக்காக திருத்தந்தை அழைப்பு !

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறையின் பின்னணியில், கட்டுப்பாடும் புதுப்பிக்கப்பட்ட உரையாடலும் அவசியம் என்று திருத்தந்தை  அழைப்பு விடுத்துள்ளார். அச்சுறுத்தல்களாலும் இராணுவ வலிமையாலும் அமைதி உருவாகாது என்று அவர் எச்சரித்தார்.

மார்ச் 1 அன்று நடைபெற்ற மூவேளை செப  உரையின்போது, திருத்தந்தை  ஈரான், இஸ்ரேயல்  மற்றும் அமெரிக்கா  ஆகியவற்றைச் சுற்றிய சமீபத்திய பதற்றங்கள் குறித்து “ஆழ்ந்த கவலை” வெளியிட்டார்.

கடந்த வார இறுதியில்,ஈரான்,இஸ்ரேயல்  மற்றும் அமெரிக்கா  இணைந்து டெக்ரான்   மற்றும் பிற ஈரான் நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு பதிலாக, ஈரான், இஸ்ரேலும் அமெரிக்க இராணுவத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வன்முறை தொடர்ந்தால் பெரும் மனிதாபிமான நெருக்கடி உருவாகும் அபாயம் இருப்பதாக திருத்தந்தை எச்சரித்தார்.

“மிகப் பெரிய அளவிலான துயர சம்பவம் உருவாகும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வன்முறைச் சுழற்சி திரும்ப முடியாத பள்ளத்தில் விழுவதற்கு முன் அதை நிறுத்துமாறு  சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் நான் மனமார்ந்த வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்றார்.

மேலும்,இராணுவ பதற்றத்தை விட தூதரக முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக “தூதரகம் மீண்டும் தனது முக்கிய பங்கைப் பெறட்டும்; நீதி அடிப்படையில் அமைதியான இணை வாழ்வை ஏங்கும் மக்களின் நன்மை மேம்படட்டும்,” என்று அவர் கூறினார். மேலும், அமைதிக்காக நம்பிக்கையாளர்கள்  தொடர்ந்து ஜெபிக்குமாறும் அழைத்தார்.