கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது.
அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.
ஆண்டவரே உமது சமாதானத்தின் கருவியாக என்னை ஆக்கியருளும். எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும் எங்கு மனவருத்தம் உள்ளதோ, அங்கு மன்னிப்பையும் எங்கு சந்தேகம் உள்ளதோ, அங்கு நம்பிக்கையையும் எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும் எங்கு துன்பம் உள்ளதோ, அங்கு இன்பத்தையும் நான் பரப்ப அருள்தாரும்.
இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி வேறு எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.
பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார்.
எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கக் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால் தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்.
இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். .
என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! - திருப்பாடல்கள் 119:105. ஆண்டவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்பின் மிகுதியால் நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. அவருடைய சொற்கள் நம் நாவுக்கு எத்துணை இனிமையானவை! நம் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.
நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.