நினைவுக்கூறுபவரே
கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது.
தொடக்க நூல் 8-1.
ஆண்டவர் பாதுகாப்பு கொடுப்பதோடு விட்டுவிட மாட்டார். நம்மை பற்றி நினைக்கிற கடவுள். பெறுமழைக்கு பிறகு நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த அனைத்தையும் ஆண்டவர் நினைவு கூர்ந்தார். காற்றுவீச செய்தார். பூமியை காய செய்தார். வெளியே கொண்டு வந்தார். உலகில் சுதந்திரமாக வாழ செய்தார்.
அவர் நினைவு கூருகிற கடவுள்.நோவாவை நினைவு கூர்ந்தார். பெரு வெள்ளத்தில் பாதுகாத்தார். ஆபிரகாமை நினைவு கூர்ந்தார் பிள்ளை செல்வத்தையும் நிறைந்த ஆசீர்வாதத்தையும் கொடுத்தார். அன்னாளை நினைவு கூர்ந்தார் சாமுவேல் பிறந்தார். கடவுள் நம்மையும் நினைவு கூர்ந்து நம்மையும், நம் உறவுகளையும், படிப்பையும், வேலையையும் நமக்குள்ள எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.
ஆண்டவரை எங்களை நினைவு கூறுபவரே உமக்கு நன்றி. எங்களையும், எங்கள் சுற்றங்களையும் இந்த உலக மக்களை கொரானா வைரஸின் கூற பிடியிலிருந்து காத்தருளும். எல்லாரும் நோயின் படத்திலிருந்து விடுதலை பெற்று சமாதானத்தோடு வாழ அருள் புரியும். ஆமென்.