எல்லாம் நீரே

அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.

தொடக்க நூல் 7-1.

ஆண்டவர் பாதுகாப்பு கொடுக்கிற இறைவன். தம்மையே நம்பியிருக்கும் பிள்ளைகளை இடர்களிருந்து பாதுகாப்பார்.  நோவா நேர்மையானவர்.  கடவுளின் கண்களில் அருள் பெற்றார். கடவுளின் பாதுகாப்பு  அவருக்கு கிடைத்தது. வரப்போகும் அழிவை ஆண்டவர் அறிவித்தார்.  அதிலிருந்து அவரும் அவரை சார்ந்தவைகளும் உயிர் தப்பிக்கும் வழியையும் ஆண்டவர் தெரிவித்தார். என்ன என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் அறிவுரை சொன்னார். அதன்படி  எல்லா ஆயத்தங்களையும் நோவாவை வைத்தே செய்ய வைத்தார்.

கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் செய்து முடித்த பின் ,  ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன. அதன் பின் ஆண்டவர் அவரை உள்ளே விட்டுக் கதவை மூடினார். ஆண்டவரே அந்த பேழையை மூடி அவர்களை பாதுகாத்தார். எப்படிப்பட்ட பாதுகாப்பை ஆண்டவர் கொடுத்தார் .

நம்மையும் ஒவ்வொரு நாளும் இடர்களுக்கு விலக்கி பாது காப்பார். உன்னதமான அவரது சிறகுகளின் கீழ் மூடி மறைத்து பாதுகாக்கும் கடவுள் அவர்.  ஆண்டவரை பற்றி கொள்வோம்.   பாதுகாப்பு பெறுவோம்.

 

ஆண்டவரே, உம்மை அதிகாலையில் தேடுகிறோம். இந்த நாள் முழுவதும் எங்களோடு இருந்து எங்களை காத்தருளும். எங்கள் வாழ்க்கை முழுவதும் எங்களோடு வாரும். நீரே எங்கள் அரண், நீரே எங்கள் கோட்டை, நீரே எங்களுக்கு எல்லாம். ஆமென்