தேடுகிற இறைவன்

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.

தொடக்க நூல் 3-9.

ஆண்டவர் நம்மை தேடுகிற இறைவன்.  ஒரு மாலை பொழுது ஆதாம் ஏவாளை காணவில்லை என்றதும் நீ எங்கே இருக்கிறாய் என்று தேடுகிறார்.  

நம் தந்தை ஒரு நாள் நாம் அவர் திரு முன்னிலையில் அமரவில்லை என்றாலும் நம்மை தேடுவார்.  என்னோடு பேசும் என் முன்னிலையில் மகிழ்வோடு இருக்கும் என்  மகனை, என் மகளை காணவில்லையே , என்று கவலை கொண்டு  அழைக்கும் அப்பா.  நம் தேவைகளை கேட்டறிய விரும்பும் இறைவன்.   

பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்று ஆண்டவர் சொல்கிறார். அவர் தேடுகிற இறைவன். 

அன்பு கொண்ட இறைவன் அவர்.

 

என் அன்பே ஆண்டவரே,   என்னை தேடுகிற உமது மேலான அன்புக்கு நன்றி. தாயினும் மேலான அன்பு வைத்து என்னை காப்பவரே உமக்கு நன்றி.  உம் பார்வையில் விலையேற பெற்றவனாய் என்றும் நானிருக்க அருள் தாரும்.  ஆமென்.