அப்பா உம் பிள்ளையாக

அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

தப்பாமல் பணி செய்ய வந்திருக்கிறேன்

எப்போதும் என்னோடு நீர் இருக்கவே

இப்போது வரம் வேண்டி வந்திருக்கிறேன்

அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

 

ஆபேலின் காணிக்கை போல் செலுத்திடவே

நோவாவின் பலி போல் பலியிடவே

அபிரகாம் போல் நம்பிக்கையில் வளர்ந்திடவே

யாக்கோபு போல் உம்மை கண்டிடவே

அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

 

மோயீசனை போல வழி நடத்த வேண்டுமே

யோசுவாவை போல பணி செய்ய வேண்டுமே

சாமுவேலை போல உம்மோடு பேச வேண்டுமே

யோபின் உத்தமும் எனக்கு வேண்டுமே

அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

 

எஸ்தரின் துணிவு எனக்கு வேண்டுமே

ரூத்தின் பணிவும் நான் பெற வேண்டுமே

தாவீதை போல உம்மை துதிக்க வேண்டுமே

சாலொமோனின் ஞானமும் தர வேண்டுமே 

அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

 

எலியாவின் வல்லமையும் பெற வேண்டுமே

எசேக்கியேல்போல் தரிசனம் காண வேண்டுமே

ஏசாயாபோல் இரைவக்குறைக்க வேண்டுமே

தானியேல் போல் ஆராதிக்க வேண்டுமே

அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

 

ஸ்நாபகனைபோல முன்னறி விக்க வேண்டுமே

மரியாளை போல் பாதம் அமர வேண்டுமே

வெரோனிகாவின் துணிவை பெற வேண்டுமே

பேதுருவை போல பிரசங்கிக்க வேண்டுமே

அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

 

ஸ்தேவானின்  மன உறுதி எனக்கு வேண்டுமே பவுல் போல நிருபங்கள் எழுத வேண்டுமே

யோவான் போல வெளிப்பாடும் தர வேண்டுமே

அதிதூதர்களின் பாதுகாவல் எனக்கு வேண்டுமே

அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

 

ஆவியின் வரங்களால் நிரம்ப வேண்டுமே 

அருட்பணிகள் பல செய்ய வேண்டுமே

ஆண்டவா உம் அடி தொடர வேண்டுமே

அற்பன வாழ்வு வாழ வேண்டுமே

அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

 

ஆமென் ஆமென் ஆமென்