உரத்த குரலில்
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
திருப்பாடல்கள 42-2.
ஆண்டவர் மேலுள்ள தாகம் எப்பொழுதும் அவருடைய உடனிருப்பை தேடும். இது உள்ளான மனிதனின் தேடல். தூய ஆவிக்குரிய வாழ்க்கையின் தேடல்.
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்று இயேசு சொன்னார். இயேசு சொன்ன தாகம் இந்த உள்ளான மனிதனின் தேடல் தான். அதை தணிக்கும் ஜீவ நீரூற்று இயேசுவிடம் மட்டுமே உண்டு
ஆண்டவரை சந்திக்க , அவரோடு பேச , அவர் பிரசன்னத்தில் அமர ஆவலோடும் உண்மையோடும் இருக்க வேண்டும்.
இந்த தாகமுள்ளவர்களைதான் இயேசு உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் என்றார்.
ஜெபம்: ஆண்டவரே உமக்கு நன்றி. கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. உம் உடனிருப்பை எனக்கு தாரும். உமது ஜீவ ஊற்றில் தண்ணீர் பருகி நிலைன் வாழ்வை பெற அருள் புரியும் ஆமென்.
Daily Program
