உலக உயிரி எரிபொருள் தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று உலக உயிரி-எரிபொருள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
வழக்கமாக இருக்கக்கூடிய புதைபடிவ எரிபொருள்களுக்கு (fossil fuel - petrol, coal, non-renewable waste) மாற்றாக புதைபடிவமற்ற எரிபொருள்கள்தான் Biofuel என்று சொல்லப்படுகிறது. தாவரங்கள், பாசி (algae ), விலங்குகளின்
கழிவுகள் இதுபோன்ற பொருள்களிலிருந்து இந்த உயிரி எரிபொருளானது தயாரிக்கப்படுகிறது..
இத்தினம் 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இத்தின அனுசரிப்பின் நோக்கமானது வழக்கமான புதைபடிவ எரிபொருள்களுக்கு (fossil fuel - petrol, coal, non-renewable waste) மாற்றாக புதைபடிவமற்ற எரிபொருட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் உயிரி-எரிபொருள் துறையில் இந்தியா மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதாகும்.
சர் ருடால்ஃப் டீசலின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர் டீசல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மற்றும் தாவர எண்ணெய் புதைபடிவ எரிபொருட்களை மாற்றுவதற்கான சாத்தியத்தை முதலில் கணித்தவர். இந்த சாதனையை சிறப்பிக்கும் வகையில் ஆகஸ்ட் 10ம் தேதி உலக உயிரி எரிபொருள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.