அன்பு எப்படிப்பட்டது?

இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக

எபேசியர்  3-18

இயேசுவின் அன்பு எப்படிப்பட்டது ?

எவ்வளவு தான் சிந்தித்தாலும் கிறிஸ்துவின் அன்பின் ஆழத்தை நாம் அறிய முடியாது. திருத்தூதர் பவுல்  அறிவுக்கெட்டாத அன்பு என்கிறார்.

அநேக நேரங்களில் நாமே நம்மை நேசியாத போது, உலகை படைத்த ஆண்டவர் நம்மை நேசிக்கிறார் என்பது உண்மையாகவே நம்முடைய அறிவுக்கெட்டாதது தான்.

அந்த அன்பின் ஆழத்தை பார்ப்போமா.

1. நம்மை நேசித்த அன்பு. நாம் விலகி சென்றாலும் தேடி வந்து நம்மை நேசிக்கும் அன்பு.

2. நமக்காக தன்னைத் தந்த அன்பு. சிலுவை சாவுக்கு ஒப்பு கொடுக்கும் அளவுக்கு நமக்காக உயிரையையே தந்த அன்பு. 

3. குறையாத முழுமையான அன்பு. தொடக்கம் முதல் இறுதிவரை மாறாது நிலைத்து நிற்கும் அன்பு. தாயின் அன்பை விட மேலான அன்பு 

4. பிரிக்கமாட்டாத அன்பு.  சோதனையோ , வேதனையோ பசியோ  சாவோ  எதுவும் அவரிடமிருந்து நம்மை பிரிக்க முடியாது. நாம் அவரை விட்டு பிரிந்தால் நம்மை தேடி வந்து  அனைத்து கொள்ளும் தூய அன்பு. 

5. வெற்றியை தரும் வேறுபாடு இல்லாத விலை மதிக்க முடியாத பேரன்பு. ஆழம் அகலமில்லாத அளவிடமுடியாத அன்பு.

அந்த அன்பை பெற நம்மை  ஒவ்வொரு நாளும் நம்மை தயார்  நிலையில் வைப்போம்.

 

அன்பின் ஆண்டவரே, இருகரங்களை விரித்து இதயத்தை திறந்து எங்களை உம் அன்புக்குள் வைத்து காத்து கொள்ளும் உமது ஒப்பிற்ற அன்புக்கு நன்றி.  ஆண்டவரே என்றும் எப்பொழுதும் உம் அன்புக்கு தகுதி உடையவர்களாக நாங்கள் இருக்க அருள் தாரும். ஆமென்.