அன்புள்ளவர்களாக

வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

யோவான் 20-1.

உயிர்தெழுந்த இயேசு முதலாவது மகதலா மரியாளுக்கு தோன்றினார்.  அவர் இயேசு மீது அதிக அன்பு கொண்டிருந்தார். எனவே பெண்ணாக  இருந்தும் அவரிடம் பயம் இல்லை.  
அதிகாலையிலேயே இயேசுவை தேடி கல்லறைக்கு செல்கிறார்.  இயேசுவை காணவில்லையே தூக்கிட்டு போய் விட்டார்களோ என குழந்தையாக பரிதவிக்கிறாள்.

இயேசுவை அடையாளம் கண்டு  ரபூணி  என்று அழைத்து மகிழ்கிறார்.  உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் கண்டவரும் , முதலில் உலகுக்கு அறிவத்தவரும் அவர் தான். 
மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; 

நாமும் ஆண்டவரிடத்தில் அன்புள்ளவர்களாக இருந்து அதிகாலையில்  அவரை தேடினால்  அவர் நமக்கு தோன்றுவார். அவரை நமக்கு வெளிப்படுத்துவார். 

 

அன்பு ஆண்டவரே, பாவியாகிய என்னை மன்னியும்  . உம்மை நான் அன்பு செய்கிறேன். உம்மை நான் கண்டு கொண்டு  உமக்கு சாட்சியாக நான் வாழ எனக்கு அருள் தாரும். உம் அன்புக்கு என்னை தகுதி உள்ளவனாக்கும். ஆமென்                

Add new comment

2 + 6 =