மத நல்லிணக்க கொண்டாட்டம். | Veritas Tamil

ரக்‌ஷா பந்தன் - மத நல்லிணக்க கொண்டாட்டம்.

பெங்களூரில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டத்தின் மூலம் மத நல்லிணக்கம் வெளிப்பட்டது.
ஆகஸ்ட் 9 பெங்களூரில்  பல்வேறு மத நம்பிக்கை மரபுகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை உணர்வு  கொண்டாடப்பட்டது. சர்வமத உரையாடல் ஆணையம் பெங்களூருவில் உள்ள கர்நாடக மண்டல மேய்ப்புப் பணிக் மையமான சுபோதனாவில் சிறப்பு ரக்‌ஷா பந்தன் கூட்டத்தை நடத்தியது. இந்த நிகழ்வு இந்தியாவின் பன்முக நெறிமுறைகளுக்கு ஒரு துடிப்பான சான்றாக அமைந்தது. சமூகங்களுக்கிடையில் உரையாடல் மற்றும் நல்லெண்ணத்தை வளர்த்தது.

பனஸ்வாடி பிரம்மகுமாரி ஆன்மீக மையத்தின் தலைவர் அருட்சகோதரி பவித்ரா தலைமையிலான பிரம்மகுமாரி சகோதரிகள், சகோதரத்துவம் மற்றும் அமைதியின் பிணைப்பைக் குறிக்கும் வகையில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்களுக்கு ராக்கி கயிறுகளை சடங்கு முறையில் கட்டினார்கள்.

brothers

 

சீக்கிய மதப் பேராசிரியர் திரு. பாட்டியா சிங், மாகாண  மத போதகர் மையத்தின் இயக்குநர் அருட்தந்தை அனில் குமார், திருமதி. ஷைனி, அருட்சகோதரி மோலி, அருட் சகோதரி ஜெஸ்ஸி மற்றும் ஆர்வமுள்ள இளம் பங்கேற்பாளர்கள் குழு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் மதங்களுக்கு இடையேயான கொண்டாட்டங்களின் முக்கியத்துவம் குறித்து அருட்தந்தை அனில் பிரசாத் உரையாற்றினார். புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்ப்பதில் அவற்றின் பங்கைக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அருட்தந்தை வினய் குமார், பல மத சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். ரக்‌ஷா பந்தன் போன்ற மதங்களுக்கு இடையேயான கொண்டாட்டங்கள் இன்றைய உலகில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அவசியத்தை சக்திவாய்ந்த நினைவூட்டலாக வழங்குகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.