ஆகஸ்ட் 14: உண்ணாவிரதம் மற்றும் அமைதிக்கான செப நாள். | Veritas Tamil

ஆகஸ்ட் 14: உண்ணாவிரதம் மற்றும் அமைதிக்கான செப நாள்.
சர்வதேச உயர் அதிகாரிகள் துறவியர் சங்கம் (UISG), 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, கன்னிமரியாளின் விண்ணேற்பு பெருவிழாவிற்கு முந்தைய நாளன்று, உலகளாவிய உண்ணாவிரதம் மற்றும் அமைதிக்கான பிரார்த்தனை தினத்தைக் கொண்டாட அழைப்பு விடுக்கிறது.
காசா முதல் சூடான் வரை, உக்ரைன் முதல் மியான்மர் வரை, ஹைட்டி முதல் காங்கோ குடியரசு வரை, சிரியா வரை - உலகெங்கிலும் உள்ள பல மக்களைப் போர் தொடர்ந்து துன்புறுத்தி வரும் நிலையில், சர்வதேச உயர் அதிகாரிகள் சங்கம் (UISG)) ஆகஸ்ட் 14 ஆம் தேதி, மரியாளின் விண்ணேற்பு விழாவிற்கு முன்னதாக, உலகளாவிய உண்ணாவிரதம் மற்றும் அமைதிக்கான பிரார்த்தனை தினத்தை அவசரமாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.
அமைதிக்கு அடையாளமாக திகழும் பெண்குலம், உலகின் புறநகர்ப் பகுதிகளில் வாழ்ந்து, துன்புறும் மனிதத்தின் வேதனையைக் கண்டு அமைதியாக இருப்பது என்பது இயலாத ஒன்று எனவே, " எங்கள் குரல்களை உயர்த்தவும், இதயங்களை ஒன்றிணைக்கவும், ஜெபிக்கவும், மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசரத் தேவையை நாங்கள் உணர்கிறோம். "
போர்கள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், மற்றும் நியாயமற்ற செயல்கள் காரணமாக உருவான உலகளாவிய வேதனைகளுக்கு, ஜெபமும் ஒற்றுமையும் சக்திவாய்ந்த பதில்களாக இருக்கின்றன என்ற நம்பிக்கையில் வேரூன்றி இந்த உண்ணாவிரத செபவழியாட்டில் இணைவோம். இந்த உண்ணாவிரத செபவழிபாட்டில் விருப்பமுள்ள அனைத்து மக்களும் இணைய அழைக்கப்படுகிறார்கள்.
"பல இடங்களில் வீடுகள் அழிக்கப்படுகின்றன, எல்லா முகங்களிலும் காயங்களின் வடுக்கள், சமூகங்கள் இங்கும் அங்குமாய் பிரிந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. இதில் "பெண்களும் குழந்தைகளும் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்" .
இனியும் எங்களால் காத்திருக்க முடியாது:
இந்த நாள் மூன்று உறுதியான செயல்களால் வழிநடத்தப்படும்:
- தற்போதைய போர்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளின் வெளிச்சத்தில், ஒன்றாக ஜெபித்து இறைவார்த்தையை சிந்தியுங்கள் .
- நீதிக்கும் அமைதிக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. குடியாட்சி மற்றும் திருஅவை தலைவர்கள் சமாதானம், ஆயுதநீக்கம் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்புக்கான பாதைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது
- வேதனை அனுபவிக்கும் மக்களுக்கு ஆதரவு வழங்கவும், வரவேற்பு மற்றும் மனிதாபிமான உதவி வலையமைப்புகள் மூலம், நிஜமான ஒற்றுமையில் ஈடுபட அழைக்கப்படுகின்றது.
"நாங்கள் காத்திருக்க முடியாது. அமைதி கட்டமைக்கப்பட வேண்டும் - அது ஒன்றாக கட்டமைக்கப்பட வேண்டும்" என்று வேண்டுகோள் உறுதிப்படுத்துகிறது.
வன்முறையால் குறிக்கப்பட்ட உலகில், நற்செய்தி, நீதி மற்றும் சகோதரத்துவத்தின் ஒளி இன்னும் பிரகாசிக்க முடியும் என்று (UISG), தொடர்ந்து நம்புகிறது.
Daily Program
