மறைக்கபட்ட தியாகம். | பாரதி மேரி | VeritasTamil

மறைக்கபட்ட தியாகம்.

இன்று பலர் நம் பெற்றோர்களின் தியாகங்கள் என்னவென்று புரியாமல் அறியாமல் அவர்களை ஒதுக்கி ஓரம்கட்டி விடுகிறோம். நம்மில் பலரின் குடும்பங்களில் தியாகத்தால் நாம் முன்னேறி இருப்போம்.

நான் சமீபத்தில் கேட்ட இந்த கதை என் கண்களில் நீர் வழிய வைத்தது. ஒரு குழந்தை தன் அம்மாவுடன் வசித்து வந்தது. அந்த குழந்தையின் அம்மாவிற்கு ஒரு கண்கள் மட்டும்தான் எனவே அவனுக்கு இது மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருந்தது  . குடும்பத்தை நடத்தவும், தன் குழந்தை படிக்கவும் அம்மா சமையல்காரராக வேலை செய்தார்.

ஒரு நாள் அம்மா அவனைப் பார்க்க  பள்ளிக்குச் சென்றாள் அவனுக்கோ வெட்கம் மற்றும் அம்மா ஏன் இவ்வாறு பள்ளிக்கு வந்து என்னை அவமானம் படுத்துகிறார்கள் என்று  மனதுக்குள் சொல்லிக்கொண்டே வெளியே ஓடி போனான்.  மறுநாள் வகுப்பைச் சேர்ந்த ஒரு பையன் அவனிடம், “ஐயோ, உன் அம்மாவுக்கு ஒரே ஒரு கண்தான்!!” என்று கமெண்ட் செய்தான்

குழந்தை மிகவும் வெட்கப்பட்டு, தன் தாயை காணாமல் போக விரும்பினான். அன்று வீட்டிற்கு வந்த பிறகு, "உன்னால்தான் என்னை கேலி செய்கிறார்கள். நீ ஏன் இறக்கக்கூடாது?" என்று தன் தாயிடம் கேட்டான். இதைக் கேட்ட பிறகும் அவன் அம்மா பதிலளிக்கவில்லை.

அவன் எப்படியாவது வெளியேற நினைத்தான் வீட்டை விட்டு, அவன் நன்றாகப் படித்து வெளிநாட்டில் வேலை வாங்கினான். அங்கே அவன் திருமணம் செய்து கொண்டான், குழந்தைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் பெற்றான், தன் தாயிடமிருந்து விலகி தனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.

ஒரு நாள் அவனுடைய அம்மா அவனைப் பார்க்க வந்தாள். அவன் போனதிலிருந்து அவனைப் பார்க்கவில்லை, முதல் முறையாக அவள் தன் பேரக்குழந்தைகளைச் சந்திக்கப் போகிறாள். அவள் மணி அடித்து கதவின் அருகே நின்றபோது அவளுடைய பேரக்குழந்தைகள் கதவைத் திறந்தார்கள், அவளைப் பார்த்த பிறகு அவள் யார் என்று தெரியாமல் அவளைப் பார்த்து சிரித்தார்கள்.

அவனுடைய மகன் வாசலில் வந்து அவளைப் பார்த்தபோது, ​​அவன் அவளைப் பார்த்து, "நீ எப்படி அழைக்கப்படாமல் என் வீட்டிற்கு வந்து என் குழந்தைகளை பயமுறுத்த முடியும். இப்போதே வெளியே போ, இனி ஒருபோதும் வராதே.!!"என்றான்

இதற்கு அவரது தாயார், ", நான் மிகவும் வருந்துகிறேன். நான் தவறான முகவரிக்கு வந்திருக்கலாம்" என்று கூறிவிட்டு வெளியேறினார்.

ஒரு நாள் அவனுக்கு  மீண்டும் சந்திப்பது குறித்து அவரது கல்லூரியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. எனவே தனது சொந்தஊருக்கு வந்தான். தன வீட்டிற்கு போன அவனுக்கு அவன் அம்மா இறந்ததாகவும் அவர் ஒரு கடிதம் கொடுத்ததாகவும் அவர் பக்கத்துக்கு வீட்டுகாரர் ஒரு கடிதத்தை கொடுத்தார்

அவர் கடிதத்தைத் திறந்து அதைப் படிக்கத் தொடங்கினார்.

என் அன்பு மகனே,

நான் உன்னை எப்போதும் நினைத்துக் கொள்கிறேன். உன்னை மிகவும் இழக்கிறேன் ( Missing ) . நான் உன் வீட்டிற்கு வந்து உன் குழந்தைகளை பயமுறுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன். நீ மீண்டும் சந்திக்க வரப் போகிறாய் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உன்னைப் பார்க்க படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

நீ வளர்ந்து கொண்டிருந்தபோது நான் தொடர்ந்து அவமானப்பட்டதற்கு வருந்துகிறேன். நீ சின்னப் பையனாக இருந்தபோது, ​​ஒரு விபத்தில் சிக்கி உன் ஒரு கண்ணை இழந்தது உனக்குத் தெரியாது. உன் அம்மாவாக, நீ ஒரு கண்ணை மட்டும் வைத்துக் கொண்டு வளர்வதைப் பார்த்து என்னால் தாங்க முடியவில்லை. அதனால், நான் உனக்கு என் கண்ணைக் கொடுத்தேன்.

கவனித்துக்கொள் என் அன்பே. உன்னை நேசிக்கிறேன்.” என்று எழுதி இருந்தது.

எனவே என் அன்பார்ந்தவர்களே, பல முறை நம் பெற்றோர்கள் நமக்காக தியாகங்கள் செய்கிறது நம் கண்ணுக்கு மறைக்கப்படுகிறது.உன் பெற்றோர் உன்னை மகிழ்ச்சியாகப் பார்க்க என்ன கஷ்டப்பட்டார்கள் என்பது உனக்குத் தெரியாது. அதனால் அவர்களை ஒருபோதும் வெறுக்காமல் தள்ளிவிடாமல் அவர்களை எப்போதும் மதித்து கவனித்துக்கொள்!.

--- இர. பாரதி