உயர்ந்த நோக்கம் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 1991ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் நாள் பிறந்தவர் ரோமன் சைனி என்பவர். மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருந்த 24 வயதான இந்த இளைஞர் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) எம். பி. பி. எஸ். மருத்துவம் படித்துள்ளவர்.
2013ஆம் ஆண்டு, தமது 22ஆம் வயதில் இந்திய குடியியல் பணிகள் தேர்வில் வெற்றிப்பெற்று இந்தியாவில் முதல் இளம் ஐ.ஏ.எஸ். என்ற பெருமையைப் பெற்றார்.
தன்னைப்போல வாழ்க்கையில் அனைவரும் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கில், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தான் வகித்து வந்த துணை ஆட்சியர் பதவியை விட்டுவிலகினார். மேலும் எம். பி. பி. எஸ். பட்டத்தையும் பொருட்படுத்தாமல், இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் unacademy.in என்ற இணையதளத்தை உருவாக்கி, அதன் இலம் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார். மேலும் இளைஞர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கான பாடத்திட்டங்களையும் இலவசமாக வழங்கி வருகிறார்.
பெற்ற பத்து மாணவர்கள் சிவில் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு இவர்களின் unacademy.in அமைப்பில் பயிற்சி
“லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” என்ற ஐ. ஏ. எஸ். அதிகாரி சகாயம் அவர்களைப் போன்று, இவரும் தன்னலம் களைந்து சேவை செய்து வருகிறார்.
ஆறறிவைப் பெறுவது கல்வியின் தலையாய நோக்கமல்ல; செயல்பாட்டை ஊக்குவிப்பதுதான் கல்வியின் தலையாய பணி.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.