நன்னிலை | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil
நன்னிலை என்பது உடல், மனம், ஆன்மா அனைத்தும் ஒருங்கிணைந்து இயங்கும் உன்னத நிலை!
உடல் நலனின் இன்றியமையாமை உடல் நோயில் வாடும்போது உணரப்படுகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்... அதுவே உடலின் நன்னிலை அன்றோ?!
நிகழ் காலத்தில் வாழ மனதைப் பழக்குங்கள்; உங்கள் நிம்மதியை யாரும் களவாட அனுமதிக்காதீர்கள்; நூறு சதவீதம் நிறைவான வாழ்க்கை சாத்தியமில்லை என உணருங்கள்; பிறரின் குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள்; நீங்களும் குறையுள்ளவர்கள் என்பதை மறவாதீர்கள்! உங்கள் மனதின் நன்னிலைக்கு நன்றியுணர்வே அடித்தளம் என உணருங்கள்!
ஆன்ம நலனில் அக்கறை காட்டுங்கள். அழியாத ஆன்மாவுக்கு அன்றாடம் உணவளியுங்கள். அமைதியான வாழ்வை அதற்குப் பரிசளியுங்கள். நிலையான வாழ்வுக்கு ஆன்ம நன்னிலை அவசியம் என ஆழமாய் நம்புங்கள்!
நன்னிலையோடு வாழ பிறரை அன்பு செய்வது போலவே உங்களையும் அன்பு செய்யுங்கள்; உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்; உணர்வுச் சமநிலையோடு வாழுங்கள்; சிறியவற்றிலும் மகிழ்ச்சி காணுங்கள்; சிந்தனைத் தெளிவோடு இருங்கள்; சலனமின்றி வாழ்வை எதிர்கொள்ளுங்கள். கற்பனை உலகைக் கைவிட்டு நிஜ உலகில் பயணியுங்கள்!
வாழ்க வளமுடன் நலமுடன்