புனிதம் | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

புனிதம் 
மனித வாழ்வின் உயர் நோக்கம். 
மனிதனின் தொடர் முயற்சியும் இறைவனின் வற்றாத அருளும் சந்தித்து சங்கமிக்கும் சமுத்திரம்!

புனிதம் இறைவனைச் சென்றடையும் வழி அல்ல; இறைவனே புனிதத்தை அடையும் வழி. அவரில் இணைந்து அவரோடு வாழ்ந்தால் புனிதம் வசப்படும்!

நேரிய உள்ளத்தோடும் உயரிய தாகத்தோடும் இறைவனை நெருங்கி வருபவர்கள் பெறும் பேறுகள்: தாழ்ச்சி, மகிழ்ச்சி, புனிதம்!
இறைவன் முன்பாக நீங்கள் ஒன்றுமில்லாதவர் என உணரும் தருணமே புனிதத்தின் அடிநாதம்!

வாழ்வின் பல நிலைகளில் வாழ்வோரும் புனிதத்தை அடைகின்றனரே! அவரவர் வாழும் நிலையில், செய்யும் பணிகளில் நேர்மையும், எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் உண்மையும்,
இதயத்தில் அன்பும் கொண்டு பிறர்நலச் சிந்தையோடு  வாழ்ந்தால் நீங்களும் 
புனிதர் தான்!

புனிதம் இவ்வுலகில் வாழும் அனைவருக்குமே உரித்தானது; 
ஒரு சிலருக்கு மட்டுமே அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகை என எண்ணாதீர். சாதாரண செயல்களையும் அசாதாரணமாகச் செய்தால் நீங்களும் புனிதர்களே! 

கடவுள் மனிதரானார் என்பது மனித குலத்துக்குப் பெருமை என்றால், 
மனிதர் புனிதர் ஆவது கடவுளுக்குப் பெருமை அன்றோ?!

வாழ்க வளமுடன் நலமுடன்!!

எழுத்து 

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி.

Tamil Survey Popup Image