குறைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள்...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.11.2024

ஆயிரம் இடையூறுகள் வந்தாலும் ஒரு குறிக்கோளை அடையும் போது குறைகள் வந்து கொண்டே தான்
இருக்கும்.

குறைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள்.

நாம் எப்போதும் நேற்று
நடந்ததைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருப்போம் என்றால்
நமக்கு நாளை நாள் சிறப்பாக அமையாது.

நேற்று நடந்த நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தைக் கொண்டு இன்று நடப்பதை சிறப்பாக மாற்ற வேண்டும் அப்போது தான் வாழ்க்கை வளமாகும்.

நீங்கள் உங்களது கடந்த காலத்தின் கைதியாக வாழாதீர்கள்.

நடந்து முடிந்ததைப் பற்றியே சிந்தித்து இன்றைய நாட்களை இழக்காதீர்கள், கடந்து வாருங்கள்.

எதிர்காலத்தை வளமுடன் வாழ பிரயத்தனம் எடுங்கள்.
இன்று அதற்காக உழைக்க ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் உழைப்பும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.

மரியே வாழ்க

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
 

Tamil Survey Popup Image