துரோகம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.03.2024

நெருக்கடிகளுக்கு நன்றி சொல் அவைகளே உன்னைச் சுற்றியுள்ளவரின் குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

தோல்விகளுக்குக் கடமைப்படு அவைகளே உனக்கு சிறந்த அனுபவங்கள். 

அவமானங்களை மறவாதே அவைகளே உனது வெற்றிக்கு உந்துதல்.

துரோகங்களை அலட்டிக் கொள்ளாதே அவை இல்லாமல் வாழ்க்கையைக் கடந்து வர இயலாது.

எப்படி வேணா வாழ்வங்கறதுக்குப் பேரு வாழ்க்கை இல்லங்க
இப்படித்தா வாழ்வங்கறதுக்குப் பேரு தாங்க வாழ்க்கை.

போராட்டத்தை, சந்திக்காத உயிரினம் எதுவும் இல்லை. போராட்டத்தில் பிறந்து போராட்டத்தில் வளர்ந்து போரட்டத்தில், முடிவது தான் இவ்வுலக வாழ்க்கை.

முடியும் வரை போராடு முடியவில்லையா!,
சற்று ஓய்வெடுத்து மீண்டும் போராடு.

ஏனெனில் இந்த உலகம் மிகப் பெரியது , உனக்கான வாய்ப்பு எங்கோ நிச்சயம்
காத்திருக்கும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் திறமையும் நம்பிக்கையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.
                    

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி