நம்பிக்கை! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 22.03.2024

நல்லதே நடக்கும் என்று நம்புங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே. நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே 
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்.
செய்வதை விரும்பி செய், 
செய்வதை நம்பிக்கையோடு செய்.

தவற விட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்துவதை நிறுத்தி வாய்ப்புகள் தொலைந்த காரணத்தை தெரிந்து கொள்.

விடியும் என்று விண்ணை நம்பு முடியும் என்று உன்னை நம்பு. 

உன்னை நீயே செதுக்கிக் கொள்ள பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும்
தான் உனக்கு உளியாக இருக்கும்.

உண்மை எது உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் வாழ்வும் நம்பிக்கையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை‌ இயேசுவே.

நம்புங்கள்
நல்லதே நடக்கும்
                    

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி